சினிமா உலகில் ஒருவருக்கு எழுதிய கதையை இன்னொருவர் நடிப்பது புதிதான விஷயமல்ல. காலம் காலமாக இந்த மாதிரி நிறைய விஷயங்கள் நடந்து வருகிறது. அந்த வகையில் தற்போது தளபதி விஜய் அவர்கள் நடிப்பதாக இருந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க போகிறார் என்ற தகவல் வெளிவந்து உள்ளது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சினிமாவில் ஒருவருக்கு எழுதிய கதையில் மற்றொருவர் நடித்து இருப்பது போன்று பல படங்கள் உள்ளது. அதை சில இயக்குநர்கள் வெளிப்படையாக பேட்டிகளில் தெரிவிக்கிறார்கள். தற்போது முன்னணி நடிகர்களாக விளங்கும் நடிகர்கள் எல்லோரும் இளம் கதாநாயகர்களாக இருக்கும் போது இந்த மாதிரி நிறைய படங்களை தவற விட்டு உள்ளார்கள்.
இந்த மாதிரி கை தவறி வேறொருவர் நடிக்கும் போது அந்த படங்கள் பெரிய அளவில் மாஸ் ஹிட்டு கொடுத்து உள்ளது. அதுமட்டுமில்லாமல் கதையைத் தேர்வு செய்வதில் பல நடிகர்கள் சொதப்பி கூட உள்ளார்கள். அப்போது தளபதி விஜய் அவர்கள் கையை விட்டு நிறைய கதைகளை நழுவிச் சென்று இருக்கிறது. காரணம் அந்த கதைகள் அவருக்கு பிடிக்காமல் இருக்கலாம், கருத்து வேறுபாடு காரணமாக இருக்கலாம் என பல காரணங்கள் கூறி வருகின்றனர். ஆனால், அவர் தவற விட்ட படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து உள்ளது. அது மட்டும் இல்லாமல் தல அஜித், சூர்யா போன்ற பல முன்னணி நடிகர்களும் இந்த மாதிரி கதையை தவிர விட்டு இருக்கிறார்கள். உதாரணத்துக்கு அஜித் அவர்கள் தவற விட்ட நிறைய படங்களில் சூர்யா நடித்து உள்ளார். இதனை போல் பல படங்கள் ஒருவர் கதாபாத்திரத்தில் மற்றொருவர் நடித்திருக்கிறார்கள். இதில் பல படங்கள் வெற்றியும் அடைந்து இருக்கிறது தோல்வி அடைந்திருக்கிறது.
இதையும் பாருங்க : திருவண்ணாமலை தீபத்தை காண 3 மணி நேரம் மலை ஏறி சென்ற தன்ஷிகா. புகைப்படம் இதோ.
அந்த வகையில் 2012 ஆம் ஆண்டு இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கப் போகிறார் என்ற தகவல் வந்தது. பின் அந்த படத்திற்கு “யோகன் அத்தியாயம்” என்று பெயரிட்டு உள்ளார்கள். மேலும், அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அந்த போஸ்டரை பார்த்த உடன் ரசிகர்கள் மத்தியில் பயங்கர பரபரப்பு நிலவியது என்றும் சொல்லலாம். ஆனால், அந்த படத்தின் கதையில் சிறு குழப்பங்கள் ஏற்பட்டதால் விஜய் அந்த படத்திலிருந்து விலகி விட்டாராம். அதற்குப் பின் அந்த படத்தில் அவர் நடிக்கவில்லை. தற்போது அந்த கதையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த இருப்பதாக தகவல் வெளி வருகின்றன. சமீப காலமாகவே கௌதம் மேனன் ரஜினிகாந்தை வைத்து படம் இயக்க உள்ளார் என்று பரவலாக பேசப்படுகின்றது.
இந்நிலையில் இந்த செய்தி வந்தவுடன் ரசிகர்கள் பயங்கர குஷி ஆகி விட்டார்கள். மேலும், கௌதம் மேனன் அவர்கள் அந்தக் கதையை ரஜினியிடம் கூறினார். ரஜினியும் ஓகே என்று சொல்லி விட்டதாக தெரிகிறது. இந்த படத்தை பிரம்மாண்டமான அளவில் அதிக பொருட்செலவில் வோர்ல்டு பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பதாக தெரிய வந்து உள்ளது. மேலும், ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தர்பார் படத்தில் நடித்து உள்ளார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு திரையரங்கிற்கு வெளியிடப்படும் என்றும் அறிவித்து உள்ளார்கள்.
இந்த படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் தான் நடந்து முடிந்தது. இதனை தொடர்ந்து ரஜினிகாந்த் “தலைவர் 168” படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்தது. ஆகவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கௌதம் மேனன் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறாரா?? தலைவர் 168 படத்தில் நடிக்கப் போகிறாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கனும்.