அன்று பாண்டியன் ஸ்டோர்ஸில் சித்து தோழியாக நடித்த இவர் தான் இனி புதிய முல்லையா ? சித்து மாதிரியே இருக்காரே.

0
976
kavya
- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கும் புதிய நடிகை குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. சீரியல் தொடங்கிய நாளில் இருந்து இன்று வரை விறுவிறுப்பு பஞ்சம் இல்லாமல் செல்லும் விஜய் டிவி சீரியல்களில் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” ஒன்று. இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் டாப்பில் இருக்கிறது. இந்த தொடர் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதையை மையமாக கொண்டது. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், காவ்யா, குமரன் தங்கராஜன், சரவணன் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள்.

-விளம்பரம்-
kavya

மேலும், இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை தெலுங்கு, கன்னடம் என இந்தியாவில் 8 மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சீரியலில் கதிர்- முல்லை இருவரும் சேர்ந்து ஹோட்டல் நடத்திக் கொண்டு வருகிறார்கள். ஆனால், அதில் பெரிய அளவில் லாபம் கிடைக்காததால் அடுத்து என்ன செய்வது? என்று புரியாமல் இருக்கிறார்கள். ஐஸ்வர்யா புதியதாக பியூட்டி பார்லர் ஒன்று நடத்தி வருகிறார்.

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்:

இன்னொரு பக்கம், மூர்த்தியின் அம்மா கனவில் வந்து வீட்டை மாற்றுங்கள் என்று சொல்கிறார். இதனால் வீட்டை விற்க்கும் முயற்சியில் மூர்த்தியின் குடும்பம் இருக்கிறது. வீட்டை மீனாவின் அப்பாவே வாங்கி விடலாம் என்று திட்டம் போடுகிறார். மூர்த்தியின் குடும்பத்தில் இருப்பவர்கள் வீட்டை விற்பதற்கான ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறார்கள். அதேசமயம் நிலம் வாங்கி வீடு கட்டும் முயற்சியில் மும்முரமாக இருக்கிறார்கள்.

சீரியலின் கதை:

இது முல்லையின் அம்மாவிற்கு தெரிய வந்து முல்லை அம்மாவும், மல்லியும் தனமிடம் பயங்கரமாக சண்டை போடுகிறார்கள். இறுதியில் வீட்டை மீனாவின் பெயருக்கு அவருடைய அப்பா எழுத நினைக்கிறார். கையெழுத்து போடும்போது தான் மூர்த்தியின் குடும்பத்திற்கு உண்மை தெரிகிறது. இருந்தும் வேறு வழியில்லாமல் வீட்டை மீனாவின் பெயருக்கு எழுதி கொடுக்கிறார்கள். இந்த உண்மை முல்லையின் அம்மாவிற்கு தெரிய வந்தால் அடுத்து என்ன நடக்க போகும்? என்று பல திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டு இருக்கிறது.

-விளம்பரம்-

சீரியலில் விலகிய காவியா அறிவுமணி:

இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டு காவியா அறிவுமணி விலகி இருக்கும் தகவல் வைரல் ஆகி வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் காவியா அறிவுமணி. இவர் சீரியலில் நடித்துக் கொண்டிருந்தாலும் சில படங்களில் கமிட்டாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இதனால் காவியா சீரியலை விட்டு விலக இருக்கிறார் என்ற தகவல் சமீபத்தில் வெளியாகியிருந்தது.

முல்லையாக நடிக்கும் நடிகை:

இதனால் காவியாவுக்கு பதில் முல்லையாக நடிக்க போகும் நடிகை குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்த முல்லையாக நடிக்கப் போவது வேற யாரும் இல்லைங்க அபிநயா தான். இவர் மறைந்த நடிகை சித்ராவின் தோழியாக ஒரு சீனில் நடித்திருந்தார். இவரே தற்போது சித்ராவாக நடிப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து இன்னும் அதிகாரப்பூர் அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.

Advertisement