விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. ஒரு சாதாரண குடும்பக் கதையை மையமாகக் கொண்ட தொடர். இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், சித்ரா, குமரன் தங்கராஜன், சரவணன், விக்ரம் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதை. இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பும், பாராட்டும் பெற்று வருகிறது. இந்த சீரியலில் ஆரம்பத்தில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் கவிதா கௌடா.
பெங்களூரை சேர்ந்த இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான மஹாபாரதம் தொடரின் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்த இவர் இதனை தொடர்ந்து கன்னடத்தில் ஒளிபரப்பான லக்ஷ்மி பிரம்மா என்ற தொடரில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் பிரபலமானார். தமிழில் நீலி தொடரில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பின்னர் பாண்டியன் ஸ்டோர்ஸ்ஸில் ஜீவாவி ஜோடியாக மீனா கதாபாத்திரத்தில் முதலில் நடித்து வந்தார்.
இதையும் பாருங்க : படுக்கைக்கு அழைத்த நபர் – மாஸ்டர் பட நடிகை வெளியிட்ட ஸ்க்ரீன் ஷாட்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்ஸில் நடித்து கொண்டு இருக்கும் போதே இவருக்கு கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்ததால் இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகினார். அதன் பின்னர் தமிழ் சீரியல்களில் இவரை காண முடியவில்லை. இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்தது.
இவர் நடித்த லக்ஷ்மி பிரம்மா தொடரில் இவருடன் இணைந்து நடித்த சந்தன்குமாருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி பெங்களூரில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் சமீபத்தில் இவர்களுக்கு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. . கொரோனா காரணாமாக இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.