பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வரும் கடை எங்கு இருக்கிறது தெரியுமா ? இதான் கடையின் உண்மையான பெயர்.

0
221
- Advertisement -

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் வரும் மளிகை கடையின் நிஜப் பெயர், இடம் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பியில் முன்னிலையில் வகுத்து வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதையை மையமாக கொண்டது. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், காவ்யா, குமரன் தங்கராஜன், சரவணன் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள்.

-விளம்பரம்-

அதோடு இந்த சீரியல் ஆரம்பித்த நாளில் இருந்து இப்போது வரை விறுவிறுப்புடன் சென்று கொண்டு இருக்கிறது. அதனால் இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை தெலுங்கு, கன்னடம் என இந்தியாவில் 8 மொழிகளிலும் இலங்கையிலும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடர் ஒளிபரப்பாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவிற்கு பாப்புலர் ஆன சீரியலாக திகழ்கிறது.

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்:

தற்போது சீரியலில் கதிர்- முல்லை இருவரும் சேர்ந்து ஹோட்டல் நடத்திக் கொண்டு வருகிறார்கள். ஆனால், அதில் பெரிய அளவில் லாபம் கிடைக்காததால் அடுத்து என்ன செய்வது? என்று இருக்கிறார்கள். ஐஸ்வர்யா புதியதாக பியூட்டி பார்லர் ஒன்று நடத்தி வருகிறார். இன்னொரு பக்கம், மூர்த்தியின் அம்மா கனவில் வந்து வீட்டை மாற்றுங்கள் என்று சொல்கிறார். வீட்டை விற்க்கும் முயற்சியில் மூர்த்தியின் குடும்பம் இருக்கிறது.

சீரியலின் கதை:

இதனால் இதை மீனாவின் அப்பாவே வாங்கி விடலாம் என்று திட்டம் போடுகிறார். இப்படி பல திருப்பங்களுடன் சீரியல் செல்வது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோரின் குடும்பம் நடத்திய மளிகை கடை குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகிறது.

-விளம்பரம்-

கடையின் இடம்:

தற்போது புதியதாக பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் நடத்தி வருகிறார்கள். இவர்கள் டிபார்ட்மென்ட் ஸ்டோர்ஸ் வைப்பதற்கு முன்பே பாண்டியன் ஸ்டோர்ஸ் சின்னதாக மளிகை கடை ஒன்றை நடத்தி வந்தார்கள். இந்த கடை குன்றக்குடியில் இருந்து காரைக்கால் செல்லும் இடத்தில் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது.

கடையின் உண்மையான பெயர்:

அந்த கடையினுடைய உண்மையான பெயர் அன்னை டிபார்ட்மெண்டல் ஸ்டோர் தான். ஆனால், தற்போது அந்த கடையை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பெயர் வைத்து நடத்தி வருகிறார்கள். அந்த புகைப்படம் தான் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இதை சீரியல் ரசிகர்கள் ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள்.

Advertisement