பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பியில் முன்னிலையில் வகுத்து வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதையை மையமாக கொண்டது. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், லாவண்யா, குமரன் தங்கராஜன், சரவணன், தீபிகா என பல நடிகர்கள் நடிக்கிறார்கள்.
அதோடு இந்த சீரியல் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், இந்த சீரியல் ஆரம்பித்த நாளில் இருந்து இப்போது வரை விறுவிறுப்புடன் சென்று இருந்து இருக்கிறது. அனைவரும் எதிர்பார்த்த படி பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் புதிய வீட்டின் புகு மனை விழாவும் சமீபத்தில் தான் நடந்தது. எல்லோருமே தங்களுடைய பெரிய வீட்டில் செட்டில் ஆகிவிட்டார்கள். தற்போது சீரியல் மீனாவின் அப்பாவை அவருடைய இரண்டாவது மாப்பிளை பிரசாந்த் கொலை செய்துவிட்டு அந்த பலியை கதிர், ஜீவா மீது போட்டு விடுகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்:
மீனாவும் அதை நம்பி விடுகிறார். பின் ஒரு கட்டத்தில் பிரசாந்த் தான் இந்த கொலையை செய்கிறார் என்ற உண்மை மீனாவிற்கு தெரிய வருகிறது. இந்த உண்மையை மூர்த்தி குடும்பத்திடம் சொல்கிறார். இதை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்து பிரசாந்தை கையும் களவுமாக பிடிக்க திட்டம் போடுகிறார்கள். பின் அனைவரும் நினைத்தபடி பிரசாந்த் உண்மையை சொல்கிறார். இன்னொரு பக்கம் ஜனார்த்தன் கண்விழித்து நடந்த உண்மையெல்லாம் சொல்கிறார்.
சீரியல் குறித்த தகவல்:
இதனால் போலீஸ் கதிர்- ஜீவாவை விடுதலை செய்கிறார்கள். பின் அனைவரும் சந்தோசமாக சேர்ந்து விடுகிறார்கள். இனி பிரசாந்த் கைது செய்யப்படுவாரா? என்ற பல அதிரடித்திருப்பங்களுடன் சீரியல் சென்று இருக்கிறது. இந்த நிலையில் சில வாரங்களாகவே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவடைய இருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் வந்தாகி விட்டது. அதற்கேற்ப சூட்டிங் முடிவடைந்து மொத்த குழுவினரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம்தான் வைரலாகி இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
இது ஒரு பக்கம் சந்தோசமாக இருந்தாலும் சீரியல் முடிவடைவது ரசிகர்கள் கொஞ்சம் வருத்தமாக தான் இருக்கிறது. இதை அடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக சீரியலில் வில்லனாக பிரசாந்த் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் மகேஷ் கூறியிருப்பது, இதுவரைக்கும் சீரியலில் வில்லனாக யாரும் நடித்ததில்லை. நான் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஒரே வில்லன். ஆரம்பத்தில் என்னுடைய கதாபாத்திரம் குறித்து தெரியாது. போகப்போக தான் என்னுடைய கதாபாத்திரம் நெகட்டிவ் ஆக மாறியது. இருந்தாலும் என்னுடைய நடிப்பு திறமையை சரியாக பயன்படுத்தினேன்.
பிரசாந்த் அளித்த பேட்டி:
ஐந்து வருஷமாக சீரியலில் வில்லனே இல்லை. என்னை வில்லனாக பார்த்ததும் மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். ஆரம்பத்தில் பயந்தேன். பின் எல்லோருக்கும் பிடித்த உடன் சந்தோஷமாக இருந்தது. நெகட்டிவ் ரோல் பண்ணினாலும் என்னுடைய கேரியர் பாசிட்டிவாக தான் அமைந்திருக்கிறது. அதேபோல் அனைவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் இரண்டாம் பாகம் வருமா? என்று கேட்கிறார்கள். நிச்சயம் எதிர்பார்க்கலாம். கதை முடிவை நோக்கி தான் போய்க்கொண்டிருக்கிறது. அப்படி முடிந்தாலும் அடுத்த சீசன் வரும். அடுத்த சீசனிலும் எனக்கு வாய்ப்பு இருந்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்று கூறி இருக்கிறார்.