கூகுள் லிஸ்ட்டில் இருக்கும் ஒருவர் படத்தில் இருக்கிறார் – லோகேஷ் சொன்ன அந்த Pan India ஸ்டார் யார் தெரியுமா ?

0
1709
- Advertisement -

லியோ திரைப்படம் LCU க்குள் வருமா வராத என்ற குழப்பங்கள் ரசிகர்களிடம் இருந்து கொண்டு தான் இருக்கிறது. மேலும் அதில் யாராவது ஸ்பெஷல் கேமியோசெய்கிறார்களா என்ற கேள்வியும் சமூக வலைதளங்களில் பரவ இது குறித்து ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சோசியல் மீடியா முழுவதும் தற்போது லியோ படம் குறித்து தான் பேசப்பட்டு வருகிறது. தளபதி விஜய்யை வைத்து “லியோ” என்ற படத்தை லோகேஷ் இயக்கி வருகிறார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ்-விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி வருகிறது.

-விளம்பரம்-

இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன், மேத்திவ் தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. லியோ படத்தின் டிரைலர் சில நாட்களுக்கு முன் வெளியாகியது. ரசிகர்கள் அதை வைத்து கொண்டாடி வருகின்றனர்.

- Advertisement -

லியோ LCU வா?

லியோ திரைப்படம் LCUக்குள் வருமா என்ற ரசிகர்களின் கேள்விக்கு தற்போது ஒரு தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அது என்னவென்றால் விக்ரம் படத்திலும் கைதி படத்திலும் வரும் கதாபாத்திரங்களும் அதன் பெயர்களையும் பயன்படுத்திக் கொள்ள NOCயை லியோ படக்குழு வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ராஜ் கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் ப்ரொடியூசர் எஸ் ஆர் பிரபு அவர்களிடம் அதற்கான NOC வாங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இது குறித்து லோகேஷ் கனகராஜ் கூறுகையில், ” என்னால் இப்போது இதைப் பற்றி கூற முடியாது இது கூறிவிட்டால் இது சஸ்பென்ஸ் உடைந்து விடும் என்றும் இதனை படம் வரும்போது ரசிகர்கள் பார்த்து தெரிந்து கொள்ளட்டும்” என்று அவர் கூறியிருந்தார். விக்ரம் மற்றும் லியோ படத்தில் இசையமைத்த அனிருத் x தளத்தில் ஒரு பதிவு ஒன்றை போட்டு இருந்தார் அதில் LEO என்று போட்டு அதன் பக்கத்தில் நெருப்பு போன்ற எமோஜிகளையும் போட்டு Code Word Accepted என்றும் அவர் பதிவு ஒன்றை போட்டு இருந்தார். இது இணையத்தில் பரவி வருகிறது.

-விளம்பரம்-

பெரிய நடிகரின் கேமியோ:

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசி லியோ படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறுகையில் இந்த திரைப்படத்தில் ஒரு பெரிய நடிகரின் கேமியோ ஒன்று உள்ளது என்று அது கூறியிருந்தார். அது பலரும் அதனை தனுஷ் என்றும் ராம்சரண் என்றும் மற்றும் பல நடிகர்கள் என்றும் கூறி வந்த நிலையில் அது ராம்சரண் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. சமீபத்தில் ராம்சரனும் லோகேஷ் கனகராஜ் ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஆனது தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

அந்தப் புகைப்படத்தை வைத்து லியோ படத்தில் ராம்சரண் ஒரு முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அதில் அவர் விஜய்க்கு நண்பராக இருப்பாரா அல்லது வில்லன்களில் ஒருவராக வருவாரா? என்பது தெரியவில்லை. அவர் எந்த கதாபாத்திரத்தில் நடிப்பார் என்பது படம் வெளியகினால் தான் தெரியும். இது குறித்து அவர்களை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ஃபயர் விட்டு வருகின்றனர்.

Advertisement