மகளின் பிறந்தநாளை கொண்டாடிய பாண்டியன் ஸ்டார் ஜீவா – இவருக்கு இவ்ளோ பெரிய மகள் இருக்காங்களா.

0
346
jeeva

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் சூப்பர் ஹிட் தொடராக ஒளிபரப்பாகி கொண்டு இருப்பது “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் தான். இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார்,காவ்யா, குமரன் தங்கராஜன், சரவணன், விக்ரம் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசமான கதை ஆகும். இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பும், பாராட்டும் பெற்று வருகிறது.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” தொடரை தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழி மாற்றம் செய்து ஒளிபரப்பு செய்து வருகிறார்கள். அந்த அளவிற்கு பாப்புலர் ஆன சீரியல். பாண்டியன் ஸ்டோரில் ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் வெங்கட் ரங்கநாதன். இவர் 1989 ஆம் ஆண்டு மே மாதம் பழனியில் பிறந்தார். இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் பழனியில் தான். இவர் முதன் முதலாக தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தான் சின்னத்திரையில் அறிமுகமானர்.

- Advertisement -

அதன்பிறகு சீரியல் நடிகர் ஆனார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற சீரியல் மூலம் தான் முதன் முதலாக நடிக்கத் தொடங்கினார். இதனை தொடர்ந்து புகுந்த வீடு, ஆண்பாவம், மாயா, தெய்வம் தந்த வீடு, அக்னி பறவை, மெல்ல திறந்தது கதவு, நினைக்க தெரிந்த மனமே போன்ற பல தொடர்களில் நடித்து உள்ளார். தற்போது இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மற்றும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா தொடர்களிலும் நடித்து வருகிறார்.

இது தவிர இவர் பல நடன நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று உள்ளார். மேலும், இவர் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், புதுயுகம், ஜெயா டிவி என பல சேனல்களில் ஒளிபரப்பாகும் தொடர்களில் நடித்து உள்ளார்.இவர் அஜந்தா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு அழகான ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இவருடைய பெண்ணின் பெயர் தேஜு. இந்நிலையில் இவரது மகளின் பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement