விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் கோமதி, மலர், ராஜி எல்லோருமே சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது வாக்கிங் போவதை பற்றி கோமதி பேசி இருந்தார். மலரின் மாமியார், என்னால் முடியாது என்றார். பின் மலர், மீனா இருவரும் கிச்சனில் சமைக்க போனார்கள். மதி, மலரின் மாமனார் மாமியார் எல்லோருமே நடக்க சென்றார்கள். அதற்குப்பின் மலர் மாமனார், மாமியார் வந்தவுடன் மலர் சிட்டுக்குருவியாக வேலை செய்து கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் ராஜி, கதிரை நினைத்து ரொம்பவே வருத்தப்பட்டு கொண்டிருந்தார். அதனால் கோமதி, கதிருக்கு போன் செய்து விசாரித்தார்.

அப்போது கதிர், எனக்கு ரொம்ப நெருக்கமானவருக்கு உடல்நிலை சரியில்லை. அதனால் தான் சென்னைக்கு ஹாஸ்பிடல் வந்திருக்கிறேன். ஆனால், இதை சொன்னால் ராஜி நேரில் வருகிறேன் என்று சொல்வாள். அதனால் தான் உண்மையை சொல்லவில்லை என்றார். அதற்குப்பின் மலரின் மாமியார் குலதெய்வ கோவிலுக்கு போவதற்காக மதி வீட்டில் சொன்னார். கோமதி, மலரின் அம்மாவையும் கூப்பிடுங்கள் என்று கட்டாயப்படுத்தி போன் பேச வைத்தார். விருப்பம் இல்லாமல் மாமியாரும் மலர் உடைய அம்மாவை அழைத்தார். இதையெல்லாம் பார்த்து மலருக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. பின் கோமதியை கட்டி அணைத்து எமோஷனலாக மலர் நன்றி சொன்னார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
மலர், குடும்பத்தில் எல்லோருமே பொங்கல் வைப்பதற்காக குலதெய்வ கோவிலுக்கு சென்றிருந்தார்கள். அங்கு மலரின் அம்மாவை பார்த்தவுடன் யாருமே கண்டு கொள்ளவில்லை. கோமதி மட்டும் அன்பு அக்கறையோடு விசாரித்தார். தங்கராஜ் வந்தவுடன் மலர் குடும்பத்தில் எல்லோருமே விழுந்து விழுந்து கவனித்தார்கள். இதை பார்த்து கோமதிக்கு கடுப்பாகிறது. பின் எல்லோருமே சந்தோஷமாக பொங்கல் வைத்துவிட்டு கதை பேசிக் கொண்டிருந்தார்கள். அதற்குப்பின் ஹாஸ்பிடலில் முத்துவேலை டிஸ்சார்ஜ் செய்து விட்டார்கள். கதிர்- முத்துவேல் இருவரும் கிளம்பி விட்டார்கள்.

சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் முத்துவேல் போன் சுவிட்ச் ஆப்பில் இருப்பதால் சக்திவேல் பதறினார். பின் கதிர்- முத்துவேல் இருவரும் ஒன்றாக போன விஷயத்தை தன்னுடைய வீட்டில் சொல்லி சண்டை போட்டார் சக்திவேல். ஒரு கட்டத்தில் சக்திவேல், பாண்டியன் இடம் தன் அண்ணனை கேட்டு
கொந்தளித்தார். கதிருக்கு போன் செய்து பாண்டியன் விசாரித்தார். அப்போது கதிர், தன்னுடன் தான் முத்துவேல் இருக்கும் விஷயத்தை சொன்னார். இதனால் சக்திவேல்- பாண்டியன் இடையே சண்டை வருகிறது. பின் மாரி, சக்திவேலை அங்கிருந்து அழைத்து சென்றார்
https://www.youtube.com/watch?v=LqzW8esuclw
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரோமோவில் தன் அண்ணனை காணவில்லை என்று சக்திவேல், பாண்டியனிடம் சண்டை போடுகிறார். பின் கோமதி கிளம்பி தன்னுடைய வீட்டிற்கு வந்துவிடுகிறார். அங்கு சுரேஷ்- மதி இருவருமே வருகிறார்கள். அப்போது சுரேஷ், பாண்டியனிடம் கதிர் மாமனாருக்கு கேன்சர். அதனால் தான் கதிர் யாரிடமும் சொல்லாமல் ஹாஸ்பிடலுக்கு அவருடைய மாமனாரை அலைத்து சென்றார் என்று சொல்கிறார். இதை கேட்டு பாண்டியன் ஷாக் ஆகிறார்






