பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துக்கு வந்த சோதனை? சோகத்தில் மொத்த குடும்பம்- என்ன ஆச்சுன்னு நீங்களே பாருங்க

0
456
pandianstores
- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மொத்த குடும்பமும் சந்தோஷமாக இருக்கின்ற தருணத்தில் காத்திருக்கும் மிகப் பெரிய அதிர்ச்சி குறித்த அப்டேட் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. பொதுவாகவே தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பியில் முன்னிலை வகுத்து வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதையை மையமாகக் கொண்டது.

-விளம்பரம்-

இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், காவ்யா, குமரன் தங்கராஜன், சரவணன் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். அதோடு இந்த சீரியல் ஆரம்பித்த காலத்தில் இருந்து இப்போது வரை விறுவிறுப்புடன் சென்று கொண்டு இருக்கிறது. அதனால் இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழி மாற்றம் செய்து ஒளிபரப்பி வருகிறார்கள்.

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்:

தெலுங்கில் வடிநம்மா என்ற பெயரிலும், கன்னடத்தில் வரலக்‌ஷ்மி வடிநம்மா என இந்தியாவில் 8 மொழிகளிலும் இலங்கையிலும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடர் ஒளிபரப்பாகி வருவது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஆரம்பத்தில் முல்லையாக நடித்து இருந்தவர் விஜே சித்ரா. இவர் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து அவருக்கு பதிலாக காவ்யா நடித்து வருகிறார். சித்ராவின் இழப்பு சின்னத்திரையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay Tv Pandian Stores Kathir : பாண்டியன் ஸ்டோர்ஸ் 'கதிர்' பற்றிய  தகவல்கள்.. – News18 Tamil

கதிர் – முல்லை ஜோடி:

இந்த சீரியலில் பலர் நடித்து வந்தாலும் கதிர் – முல்லை ஜோடி தான் இந்த நிகழ்ச்சிக்கு ஒரு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத்தந்தது என்று சொல்லலாம். தற்போது சீரியலில் முல்லைக்கு குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்று தெரிந்தவுடன் வீட்டில் உள்ள எல்லோருமே ஒன்று சேர்ந்து முல்லை, கதிருக்கு உறுதுணையாக நிற்கின்றனர். பின் வீடு கட்டுவதை கூட விட்டுவிட்டு முலைக்கு ட்ரீட்மெண்ட் செய்து கொண்டிருந்தனர். ஆனால், அதற்குள் முல்லை கோவில். பூஜை பரிகாரம் என்று தன்னுடைய உடல் வருத்தி செய்து கொண்டிருந்தார்.

-விளம்பரம்-

முல்லைக்கு நடக்கும் ட்ரீட்மெண்ட் :

இதை பார்த்து கஷ்டப்பட்டு மூர்த்தி மற்றும் குடும்பத்தினர் 5 லட்சத்தை தயார் செய்து முல்லை மருத்துவ செலவிற்கு கொடுத்து ட்ரீட்மெண்ட் பண்ண சொல்கிறார்கள். பின் முல்லைக்கும் ட்ரீட்மெண்ட் தொடங்கிய உடன் கதிர், முல்லையை பத்திரமாக பார்த்துக் கொள்கிறார். முல்லையை ஒரு வேலையைக் கூட செய்ய விடாமல் வீட்டில் உள்ள எல்லோரும் கவனித்து கொள்கிறார்கள். பின் முல்லைக்கு குழந்தை பிறக்க வேண்டும் என்ற ஆவலுடன் எல்லோரும் காத்துக் கொண்டிருக்கின்ற நிலையில் டாக்டர் முல்லைக்கு கூடிய விரைவில் கரு உருவாகி விடும் என்று கூறியிருந்தார். இதனால் ஒட்டுமொத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமே உற்சாகத்தில் இருக்கிறது.

TV Pandian Stores Mullai medical report - மெடிக்கல் ரிப்போர்ட் ரகசியத்தை  தெரிந்துக் கொண்ட முல்லை... கண்ணீரில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் Vijay TV  Pandian Stores ...

மூர்த்தி குடும்பத்திற்கு காத்திருக்கும் அதிர்ச்சி:

முல்லையின் அப்பா, அம்மா எல்லாம் பெண் குழந்தை பிறந்தால் தனலட்சுமி என பெயர் வைக்க வேண்டும் என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கே அதிர்ச்சி அளிக்கும் வகையில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், முல்லைக்கு குழந்தை பிறக்காது என்ற அதிர்ச்சித் தகவல் தான். மொத்த குடும்பத்திற்கும் இந்த விஷயம் கூடிய விரைவில் தெரிய வருவது போல காட்சி இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால், கதையில் எந்தவித மாற்றமும் செய்ய வேண்டாம் இப்படியே போகட்டும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Advertisement