பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மீண்டும் ஒரு நாயகி மாற்றம் – இனி இவருக்கு பதில் இவர்.

0
1798
pandian Stores
- Advertisement -

மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இருந்து பிரபல நடிகை மாற்றம் செய்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பியில் முன்னிலையில் வகுத்து வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதையை அண்ணன் கொண்டது. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், லாவண்யா, குமரன் தங்கராஜன், சரவணன் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள்.

-விளம்பரம்-

மேலும், இந்த சீரியல் ஆரம்பித்த நாளில் இருந்து இப்போது வரை விறுவிறுப்புடன் சென்று கொண்டு இருக்கிறது. அதனால் இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. கடந்த சில மாதங்களாகவே சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. சீரியலில் தனியாக இருந்த முல்லையும், கதிரும் சமையல் போட்டியில் சிறப்பாக விளையாடி பத்து லட்சம் ரூபாய் பணத்தை வென்று தங்கள் வீட்டிற்கு வருகிறார்கள். இதை அறிந்த மீனாவின் அப்பா கிண்டல் கேலி செய்கிறார். பின் மூர்த்தி குடும்பத்துக்கும் மீனாவின் அப்பா ஜனார்தனுக்கும் இடையே சண்டை ஏற்படுகிறது.

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்:

இதனால் ஜனார்தன் மூர்த்தி குடும்பத்தை வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார். மனமுடைந்து மூர்த்தியின் மொத்த குடும்பமும் வீட்டை விட்டு வெளியே வருகிறது. பின் கதிர் தன்னுடைய வீட்டிற்கு மொத்த குடும்பத்தையும் கூட்டிக் கொண்டு செல்கிறார். வீட்டை கட்டும் வரை கதிர் வீட்டில் இருக்க முடிவு எடுக்கிறார்கள். மூர்த்தியின் மொத்த குடும்பமும் தாங்கள் வீடு கட்டும் இடத்தை ரிஜிஸ்டர் செய்து விடுகிறார்கள். மேலும், மூர்த்தியின் குடும்பம் தாங்கள் புதிதாக வாங்கிய இடத்தில் வீடு கட்டுவதற்கான வேலையை ஆரம்பிக்கிறார்கள்.

சீரியலின் கதை:

இதையெல்லாம் பார்த்து மீனாவின் அப்பா ஜனார்த்தனுக்கு வயிறு எரிகிறது. எப்படியாவது இவர்கள் வீடு கட்டும் வேலையை தடுத்து நிறுத்த சதி திட்டம் போடுகிறார். இன்னொரு பக்கம், கண்ணன் தன்னுடைய அலுவலகத்தில் மேலதிகாரியாக இருந்தவரை வருமான வரி துறை அதிகாரியிடம் ஊழல் வழக்கில் மாட்ட வைக்கிறார். அவர்கள் ஜனார்த்தனனுக்கு நெருங்கிய உறவினர் என்பது தெரிய வருகிறது. பின் கண்ணனை பழிவாங்க இதுதான் வாய்ப்பு என்று ஜனார்த்தன் நினைக்கிறார். ஆண்கள் மளிகை கடையும், பெண்கள் ஓட்டலையும் பார்த்துக் கொண்டு வருகிறார்கள். இப்படி பல திருப்பங்களுடனும் எதிர்பார்ப்புடனும் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

-விளம்பரம்-

மீண்டும் நடிகை மாற்றம்:

இந்த நிலையில் திடீரென பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து பிரபல நடிகை மாற்றம் செய்திருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த தொடர் ஆரம்பத்தில் இருந்தே பல நடிகர்கள் மாற்றம் செய்திருக்கிறார்கள். குறிப்பாக முல்லை, ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்தவர்கள் நிறைய முறை மாறி இருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது மீனாவின் தங்கையாக ஸ்வேதா கதாபாத்திரத்தில் நடித்த நடிகை தான் மாற்றம் செய்திருக்கிறார். சீரியலில் இந்த கதாபாத்திரத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே பெரிதாக எந்த ஒரு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

ஸ்வேதா ரோலில் நடிப்பவர்:

தற்போது ஸ்வேதா கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. முல்லையின் அக்கா மல்லியின் மகனுக்கும், மீனாவின் தங்கை சுவேதாவிற்கும் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடத்த இருக்கிறார்கள். அதனால் தற்போது புதிய சுவேதாவாக ஐஸ்வர்யா நடிக்க இருக்கிறார். அதற்கான அறிவிப்புதான் தற்போது வெளியாகியிருக்கிறது. ஐஸ்வர்யாவும் ஏற்கனவே நிறைய சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் முடிவடைந்த சிப்பிக்குள் முத்து என்ற தொடரிலும் இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement