எங்களுக்கு இந்த தேதியில் பதிவுத் திருமணம் முடிந்தது – விசாரணையில் ஷாக்கிங் தகவலை சொன்ன ஹேமந்த்.

0
7895
chitra
- Advertisement -

பிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விஐய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றுள்ளது. அந்த வகையில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் மத்தியில் அமோக ஆதரவை பெற்றுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் எத்தனை ஜோடிகள் நடித்து வந்தாலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஜோடி என்றால் கதிர்- முல்லை ஜோடிதான். இதில் கதிராக நடிகர் குமரனும், முல்லையாக நடிகை சித்ராவும் நடித்து வருகின்றனர்.

-விளம்பரம்-

இதில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து முழுமையாக பல இல்லத்தரசிகளின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை சித்ரா. நடிகை சித்ரா தொகுப்பாளினி, நடிகை, நடனம், மாடலிங் என பல திறமைகளைக் கொண்டவர். நடிகை சித்ரா அவர்கள் முதன் முதலாக மக்கள் டிவியில் டிவியில் தொகுப்பாளினி ஆனார். அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா, பெரிய பாப்பா என்ற தொடரில் நடித்து வந்தார். ஆனால், இவருக்கு மிகப்பெரிய பேரும் புகழும் ஏற்படுத்தி கொடுத்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான். இவருக்கென்று சமூக வலைத்தளத்தில் தனி ஆர்மி எல்லாம் கூட துவங்கிவிட்டது.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் நடிகை சித்ரா ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார். நடிகை சித்ரா ஈ.பி.பி ஃபிலிம் சிட்டியில் நேற்றிரவு படபிடிப்பு முடித்துவிட்டு இன்று அதிகாலை (டிசம்பர் 8) 2.30 ,மணி அளவில் சென்னை நசரத்பேட்டையில் உள்ள ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அந்த ஹோட்டலில் அவரது வருங்கால கணவரான ஹேமந்த் இருந்துள்ளார். இந்நிலையில், சித்ரா ஹேமநாத்திடம் தான் குளிக்கச் செல்வதாக கூறி ரூமிற்கு வெளியே செல்ல சொன்னதாகவும், வெகுநேரம் ஆனதால் அறையின் கதவை தட்டியதாகவும் ஹேமநாத் தெரிவித்துள்ளார்.

chitra

சித்ரா அறையின் கதவை திறக்காததால் ஹோட்டல் ஊழியரிடம் சொல்லி மாற்று சாவியை எடுத்துவந்து அறையை திறந்து பார்த்தபோது சித்ரா அறையில் உள்ள மின்விசிறியில் புடவை மூலம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரிவிய வந்துள்ளது. இதனால் ஹேமந்த்திடம் போலீசார் விசாரணை நடத்திக்கொண்டுள்ளார்.நடிகை சித்ராவுக்கு ஹேமந்த்துக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் நிச்சயதார்த்தம் நடந்தது அனைவர்க்கும் தெரியும். இந்த நிலையில் சித்ராவும் ஹேமந்தும் தனது திருமண தேதியை இன்னும் அறிவிக்காமல் இருந்து வந்தார்கள். தற்பொழுது ஹேமந்த்திடம் நடந்த முதல்கட்ட விசாரணையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக போலீசிடம் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த அக்டோபர் 19-ம் தேதி இருவருக்கும் பதிவுத் திருமணம் செய்து கொண்டதும் விசாரணயில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து தற்போது சித்ராவின் மரணம் குறித்து ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

-விளம்பரம்-
Advertisement