ஜீவா கதாபாத்திரத்தை இதனால் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்- குமரன் சொன்ன சூப்பர் தகவல்.

0
54830
Pandian-stores

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்கள் ரசிகர்கள் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியின் தற்போதைய சூப்பர் ஹிட் தொடராக இருப்பது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான்.. இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பும்,பாராட்டும் பெற்று வருகிறது. குடும்ப பந்தத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வரும் இந்த தொடரில் மூன்று ஜோடிகள் நடித்தாலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஜோடி என்னவோ கதிர்-முல்லை ஜோடி தான். மேலும், இவர்கள் இருவரும் கூட இந்த சீரியலின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம் என்று கூட சொல்லலாம்.

Related image

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கமிட்டாகி அடுத்த சில மாதங்களிலேயே இவங்க ரெண்டு பேரும் ஜோடி நிகழ்ச்சியில் இணைந்து நடனம் ஆடினார்கள். ஆனால், அந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவர்களுக்கு உள்ள என்ன நடந்துச்சுன்னு தெரியல ரெண்டு பேருமே எந்த நிகழ்ச்சியிலும் ஜோடியாக கலந்து கொள்ளவில்லை. அதிலும் இவர்கள் இருவரில் இருந்து ஒருவர் சீரியலை விட்டு விலக போறாங்கள் என்று கூட இணையங்களில் வதந்தியை கிளப்பினார்கள். இப்படி சித்ரா,குமரன் இடையே நடந்த பிரச்சனையெல்லாம் வதந்தி, சீரியல் விளம்பரத்திற்காக செய்தது என்று கூறி இருந்தார்கள்.

ஆனால், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் குமரன், அதில் சித்ராவுடன் இருப்பதை காண்பித்து தங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருந்தார். அதே போல சித்ராவும் பேட்டி ஒன்றில் குமரனுக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறியிருந்தார். இவர்கள் இருவருக்கும் எந்த பிரச்சனை இல்லை என்பதை உறுதி செய்யும் வகையில் சமீபத்தில் இவர்கள் இருவரும் இணைந்து பேட்டி ஒன்றை அளித்திருந்தனர்.

-விளம்பரம்-

வீடியோவில் 4:33 நிமிடத்தில் பார்க்கவும்

இந்த குமாரனிடம், சித்ரா கேள்வி கேட்டிருந்தார், அதில் டெஸ்ட் சூட்டின் போது நீங்கள் ஜீவாவாகவும் செய்து இருந்தீர்கள் கதிராகவும் செய்து இருந்தீர்கள். அதில் எது உங்களுக்கு பிடித்திருந்தது என்று சித்ரா கேட்டதற்கு, பதிலளித்த குமரன். நான் ஏற்கனவே நடித்த மாறன் கதாபாத்திரத்தை போன்று தான் ஜீவா கதாபாத்திரமும் இருந்தது. ஆனால், குமரன் கதாபாத்திரம் கொஞ்சம் வித்தியாசமாக இருந்ததால் அதனை தேர்ந்தெடுத்ததாக கூறியுள்ளார். குமரன் ஈரமான ரோஜாவே சீரியலில் மாறன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement