பொதுவாக சினிமாவில் தான் கதாநாயகிகளுக்கு பெரும்பாலும் வாய்ப்பு மறுக்கப்படும். அதிலும் சினிமாவில் அழகாக இல்லை என்றால் அவர்கள் சிறப்பான நடிகையாக இருந்தாலும் அதிக நாட்கள் சினிமாவில் நீடிக்க முடியாது. அந்த வகையில் சின்னத்திரையிலும் நிற பாகுபாடு இருப்பதாக பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா குற்றம் சாட்டியுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது இந்த தொடரைப் பார்த்துவிட்டு சன் தொலைக்காட்சியில் லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற தொடரையும் ஆரம்பித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் பாருங்க : ராஷ்மிக மந்தனா நடத்திய சென்சேசினல் போட்டோ ஷூட்.! சொக்கிப்போன ரசிகர்கள்.!
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சித்ரா பேசுகையில், பெண் என்றாலே வீட்டிலும், சமயலறையில் தான் இருக்க வேண்டும் என்று ஒரு சமுதாயம் சொல்கிறது. அந்த சமுதாயத்தில் இருக்கும் ஒரு குடுப்ப பெண் தான் நானும். நான் இப்போது இருக்கும் இந்த இடத்திற்க்கு நான் கஷ்டபட்டு தான் வந்தேன்.
நான் ஆடிஷன் சென்ற சில இடங்களில் நீயெல்லாம் எப்படி அன்காரக வருவ, நீ எல்லாம் எப்படி நடிகையாக வருவ என்று மூஞ்சிக்கு நேரே என்னை சொல்லி உள்ளார்கள். நான் ரொம்ப கலர் கிடையாது, டஸ்கி கலர்தான். ஆனா, இதுவும் அழகுதானே?! நம்ம ஆளுங்க ஏன் வெள்ளையா இருக்கிற பொண்ணுங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறாங்கனு தெரியல. சின்னத் திரையிலும் இந்த கொடுமை இருக்கு’ என்று கூறியுள்ளார் சித்ரா.