ஹீரோயின் நீயா நானா.! மேடையில் இருந்து பாதியில் சென்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை.!

0
26664
Sujitha
- Advertisement -

விஜய் டிவியில் சமீபத்தில் தொடங்கப்பட்ட பாண்டியன் ஸ்டார் என்ற தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அண்ணன் தம்பிகளுக்கு இடையிலான பாசமான கதையாக இந்த தொடர் ஒளிபரப்பபட்டு வருகிறது. சொல்லப்போனால் இந்த நிகழ்ச்சியின் வெற்றியை அடுத்து சன் டிவியில் லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற தொடரை கூட ஆரம்பித்தனர்.

-விளம்பரம்-

இந்த தொடரில் கதிர் மற்றும் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரம் ஜோடி தான் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்ற ஜோடியாக இருந்து வருகின்றனர். மேலும், இவர்கள் இருவரும் இணைந்து ஜோடி என்ற நிகழ்ச்சியிலும் நடனமாடியுள்ளார்கள். அதே போல அண்ணன் அண்ணி கதாபாத்திரத்தில் ஸ்டாலின் மற்றும் சுஜாதா நடித்து வருகின்றனர்.

இதையும் பாருங்க : கவின் குறித்து மோசமாக ட்வீட் செய்த காமெடி நடிகர் சதீஷ்.! 

- Advertisement -

சமீபத்தில் இந்த தொடரில் சிறந்த துணை கதாபாத்திரத்திற்கான விருது சுஜாதாவிற்கு, சிறந்த லீட் நடிகைக்கான விருது சுஜாதாவிற்கு வழங்கபட்டது. இது அனுபவமிக்க நடிகையான சுஜாதாவிற்கு கொஞ்சம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாம். துணை நடிகை விருதை பெற்ற சுஜாதா, யாருக்கு சப்போர்ட் பண்ணினேன்னு தெரியலை’ ன்னு தன்னோட அதிருப்தியை வெளிப்படுத்திட்டு, பாதியிலேயே மேடையில் இருந்து வெளியேறியதும் குறிப்பிடத்தக்கது.

Image result for pandian stores sujitha

தற்போது பாண்டிய ஸ்டோர்ஸ் களத்தில் யார் லீட் ரோல் என்று ஒரு பெரிய பஞ்சாயத்தே போய்கொண்டிருக்கிறதாம். உங்களுக்கும் சுஜிதாவுக்கும் இடையே பிரச்னையாமே’ என சித்ராவைக் கேட்ட போது, சீரியல்லயா அல்லது நிஜத்துலயா’ என்றவர், ‘விருது விழாவுல என்ன நடந்ததுனு எல்லாருக்கும் தெரியும். நான் எதுவும் பேச விரும்பலை. என்னைப் பொறுத்தவரை என்னால ஷூட்டிங் பாதிக்கப்படக் கூடாதுங்கிறதுல நான் உறுதியா இருக்கேன் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement