கவின் குறித்து மோசமாக ட்வீட் செய்த காமெடி நடிகர் சதீஷ்.!

0
7426
Kavin

தமிழ் சினிமாவில் தற்போதைய காமெடி நடிகர்கள் என்றால் அது யோகி பாபு, சூரி மற்றும் சதீஷ் தான். இதில் யோகி பாபு பல்வேறு படங்களில் பட்டையை கிளப்பிக்கொண்டிருக்க சதீஷ் மற்றும் சூரி காட்டில் கொஞ்சம் கம்மியாக தான் வாய்ப்புகள் குறைவாக தான் இருந்து வருகிறது.

இருப்பினும் சூரியை விட சதீஷ் அதிகபடியான பட வாய்ப்புகளை பிடித்து விடுகிறார். ஆரம்பத்தில் கிரேசி குழுவில் இருந்து வந்த சதீஷ் பல்வேறு மேடை நாடகங்களில் நடித்துள்ளார். தற்போது சினிமாவில் காமெடி நடிகராக இருந்து வரும் சதீஷ் தற்போது ஹீரோவாக நடித்துள்ளார்.

இதையும் பாருங்க : வனிதா பெயரை டாட்டூ போட்டது ஏன்.! முதன் முறையாக விளக்கம் கொடுத்த ராபர்ட்.!

- Advertisement -

பிரபல காமெடி நடிகர் சதீஷ் எப்போதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருந்து வருவார். மேலும், இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு மிகப்பெரிய ரசிகரும் ஆவார். கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின்போது போட்டியாளர்களை குறித்து அடிக்கடி ட்வீட் செய்து வந்தார் சதீஷ். தற்போது இந்த சீசனையும் பின் தொடர்ந்து வருகிறார் சதீஷ். 

சமீபத்தில் கவின் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சதீஷ். அதில், எப்போதும் பாத் ரூமில் இருப்பது ப்ரஷ், பேஸ்ட், கவின் என்று பதிவிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் பலரும் கவினை படு மோசமாக திட்டித்தீர்த்து வருகின்றனர்.