என் கணவரை காணவில்லை.! பரபரப்பை ஏற்படுத்திய பாபநாசம் பட நடிகையின் வீடியோ.!

0
1339
Asha-Sarath

உலக நாயகன் கமல் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ‘பாபநாசம்’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தவர் நடிகை ஆஷா சரத். அதன் பின்னர் கமல் நடித்த தூங்காவனம் படத்திலும் நடித்துள்ளார். மேலும், மலையாள சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.

#Evidey

#Evidey Promotion video

Asha sharath ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಬುಧವಾರ, ಜುಲೈ 3, 2019

சமீபத்தில் ஆஷா சரத் தனது முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் தனது கணவரை சில நாட்களாக காணவில்லை. அவரை கண்டுபிடிப்பவர்கள் கட்டப்பனை போலீசில் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதையும் பாருங்க : உதவி செய்ததை நினைவூட்டிய மீரா.! காதுகொடுத்து கேட்கலாம் கெட்ட வார்த்தையில் பேசிய அபிராமி.! 

- Advertisement -

இந்த விடியோவை கண்ட அவரது பாலோவர்கள் அந்த விடியோவை வைரலாக பகிர துவங்கினர். ஆனால், பின்னர் தான் தெரிந்தது ஆஷா தனது படத்தின் விளம்பரத்திற்காக இப்படி பேசியுள்ளார் என்று. ஆஷா சரத் நடித்துள்ள ‘எவிடே’ என்ற மலையாள படம் தற்போது திரைக்கு வந்துள்ளது

அந்த படத்தின் விளம்பரத்திற்காக தான் ஆஷா இப்படி பேசினாராம். இதனால் ஆஷாவை பலரும் திட்டி தீர்த்து வருகின்றனர். மேலும், ஆஷா சரத்தின் வீடியோ தவறான முன் உதாரணத்தையும், மோசமான விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடியது. எனவே அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  மஜித் என்பவர் இடுக்கி மாவட்ட போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement