உதவி செய்ததை நினைவூட்டிய மீரா.! காதுகொடுத்து கேட்கலாம் கெட்ட வார்த்தையில் பேசிய அபிராமி.!

0
5553
Abhirami

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்து அபிராமி மீராவை கடுமையாக திட்டி கொண்டேன் இருந்தார். ஆனால், பின்னர் தான் தெரிந்தது அபிராமி மட்டும் மீரா இருவருமே பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பாகவே பரிச்சயமானவர்கள் தான் என்றும் இவர்கள் இருவரும் மாடல் அழகிகள் என்பதால் ஒருவரை ஒருவர் ஏற்கனவே தெரியும் என்றும் தெரியவந்தது.

அபிராமி, மாடல் அழகி என்ற பெயரில் தனது தோழிகளை மீரா ஏமாற்றி உள்ளார் என்றும் அவள் ஒரு ஏமாற்று வாதி என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் சமையலறையில் மீராமற்றும் அபிராமி பேசிக்கொண்டிருக்கையில் மீரா, அபிராமியிடம் ‘உனக்கு என்ன தான் பிரச்சினை’ என்று கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது பதிலளித்த மீரா எனக்கு எதுவும் பிரச்சனை இல்லை என்று கூறினார்.

இதையும் பாருங்க : பிக் பாஸ் வீட்டிற்கே சென்று சாண்டிக்கு பிறந்தநாள் வாழ்த்து.!இது யாருனு தெரியுமா.! 

- Advertisement -

பின்னர் உனக்கும் எனக்கும் எனக்கும் சம்பந்தம் என்று மீரா கேட்க உன்னை நான் தான் ஒரு மாடல் அழகியாக உருவாக்கியதோடு உனக்கும் எனக்கும் உள்ள தொடர்பு முடிந்துவிட்டது. எனக்கு மற்றபடி எனக்கு எந்த பிரச்சனையும் கிடையாது ஆனால், வந்த நாள் முதலே என்னை நீ சண்டையிட்டு கொண்டே இருப்பது தான் எனக்கு ஏனென்று தெரியவில்லை உனக்கு நான் உதவி தானே செய்தேன் என்று மீரா கூறியதும் கடுப்பான அபிராமி உதவி செய்துவிட்டு ஏன் இப்படி சொல்லி காண்பிக்கிற என்று கோபமாக பேசினார். பின்னர் மேடையில் பேசிய வனிதா அவள் இதுவரை யாரிடமும் நான்தான் அவளை மாடல் அழகியாக மாற்றினேன் என்று சொன்னதே இல்லை என்று மீராவுக்கு சப்போர்ட் செய்தார்.

இதுவரை மீரா என்ன சொல்ல வருகிறார் என்பதை காது கொடுத்துகேட்காத அபிராமி ‘நீங்க எல்லாரும் சேர்ந்து ஏதோ பிளான் பண்றீங்களா’ என்று வனிதாவையும் கத்திவிட்டார். பின்னர் அங்கிருந்து சென்ற அபிராமி ‘நான் பேசத் தெரியாமல் இங்கிருந்து செல்ல வில்லை இந்த விஷயங்கள் எல்லாம் என் மண்டையை குடைகிறது’ என்று ஆங்கிலத்தில் கெட்ட வார்த்தையைப் பயன்படுத்தி பொதுவாக திட்டிவிட்டார். இதனால் அங்கே இருந்த வனிதாவுக்கும் சற்று கோபத்தை ஏற்படுத்தியது. பின்னர் அபிராமியிடம் சென்று நீ செய்தது தவறு என்னையும் ஏன் திட்டுகிறாய் எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்று கூறினார்.

-விளம்பரம்-
Abhirami

மீரா என்னதான் தவறு செய்திருந்தாலும் நேற்று அவர் அபிராமியிடம் பிரச்சினையை தீர்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் தான் பேசினார். ஆனால், அதையும் காது கொடுத்து கேட்க அபிராமி, மீரா என்ன சொல்ல வருகிறார் என்று எடுத்துக் கூறிய வனிதாவையும் இப்படி கெட்ட வார்த்தையை பயன்படுத்தி திட்டிவிட்டார்.

Advertisement