இளம்பெண்ணை கடத்திய வழக்கில் மாரியப்பன் தங்கவேலு சகோதரர் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் மிகப் பிரபலமான விளையாட்டு வீரர்களில் ஒருவர் மாரியப்பன் தங்கவேலு. இவர் தமிழ்நாட்டு விளையாட்டு வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தடகள விளையாட்டு வீரர். அதிலும் மாற்றுத்திறனாளி உயரம் தாண்டுதல் பிரிவில் விளையாடி வருகிறார். இவர் தமிழ் நாட்டிலுள்ள சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பெரியவடகம்பட்டியை சேர்ந்தவர். இவருக்கு நான்கு சகோதரர்கள், ஒரு சகோதரி உள்ளனர்.

இவர் சிறுவயதாக இருக்கும்போதே இவர் உடைய தந்தை குடும்பத்தை கைவிட்டார். பின் தாயார் சரோஜா தான் தன்னுடைய பிள்ளைகளை வளர்த்தார். மேலும், கஷ்டப்பட்டு கூலி வேலை செய்து குடும்பத்தை வளர்த்து வந்தார். வறுமையில் வளர்ந்த இவர் விளையாட்டில் ஆர்வம் காட்டினார். பின் தடகள போட்டிகளில் முறையான பயிற்சி எடுத்தார். மேலும், தன்னுடைய 14 வயதில் உயரம் தாண்டும் போட்டியில் கலந்து கொண்டு மாரியப்பன் இரண்டாவது இடத்தை பெற்றார்.
ஒலிம்பிக் வீரர் மாரியப்பன் :
அப்படியே படிப்படியாக உயரம் தாண்டுதல் போட்டியில் பதக்கங்களை வென்றிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் 2020 ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டில் வெள்ளி பதக்கம் வென்றிருக்கிறார். அதோடு பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்று இருக்கிறார் மாரியப்பன். இந்நிலையில் ஒலிம்பிக் வீரர் மாரியப்பன் சகோதரர் மீது போலீசில் கடத்தல் புகார் கொடுத்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இளம்பெண்ணை கடத்திய மாரிமுத்து சகோதரர்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பெரியவடக்கம்பட்டியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனியார்
கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். இவரை அதே ஊரை சேர்ந்தவர் கோபி. அதாவது பாரா ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்ற மாரிமுத்துவின் சகோதரர் கோபி. இவர் அந்தப் இளம்பெண்ணை கடத்தி சென்றதாக புகார் எழுந்துள்ளது. அந்த இளம்பெண்ணை கோபி தன் நண்பர்களுடன் சேர்ந்து கடத்திச் சென்று பெங்களூரில் உள்ள மாரியப்பன் வீட்டில் அடைத்து வைத்ததாக இளம் பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இளம் பெண்ணின் பெற்றோர் அளித்த பேட்டி:
இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இதுகுறித்து இளம் பெண்ணின் பெற்றோர்கள் பேட்டியளித்துள்ளார்கள். அதில் அவர்கள் கூறி இருப்பது, என் மகள் வீட்டில் இருந்தார். வீட்டில் இருந்தால் என் மகளை மாரியப்பன் சகோதரர் ஆள் வைத்து கடத்திவிட்டார். இது குறித்து நாங்கள் மாரியப்பனிடம் கேட்டதற்கு எந்த ஒரு பதிலையும் சொல்லவில்லை. எங்க ஊர்க்காரர் எல்லாம் போய் கேட்டதற்கு அவர் கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் பதிலளித்தார். அதுமட்டுமில்லாமல் இன்னும் கொஞ்ச நேரத்தில் விசாரித்து வந்து உங்கள் பெண்ணை ஒப்படைகிறோம் என்று சொன்னார். ஆனால், இன்று வரையும் என் மகள் வீடு திரும்பவில்லை. மாரியப்பன் வீடு பெங்களூரில் இருக்கிறது.

மாரியப்பன் குறித்து எழும் கண்டங்கள்:
தங்க மாரியப்பன் வீட்டில் என் மகளை வைத்துக் கொண்டு அவருடைய பிரபலத்தை பயன்படுத்தி என் மகளை விட மாட்டுகிறார்கள். தயவு செய்து என் மகளை மீட்டு கொடுங்கள் என்று கண்ணீர் மல்க பேட்டி அளித்திருக்கிறார். இந்நிலையில், கோபி - பவித்ரா திருமணம் செய்து கொண்டு ஓமலுார் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்தனர். போலீசார் இருதரப்பிலும் பேச்சு நடத்தி வருகின்றனர். இப்படி மாரிமுத்துவின் சகோதரர் மீது குற்றம் சாட்டி இருக்கும் இளம் பெண்ணின் பெற்றோர் குறித்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.





