யூடுயூபில் கலக்கி வரும் ‘பரிதாங்கள்’ சேனல் புகழ் கோபி சுதாகர் இணை குறித்து அறிமுகம் தேவையில்லை. கடந்த 2018ஆம் ஆண்டு பரிதாபங்கள் புரொடக்‌ஷன்ஸ் என்ற பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்கினர். மேலும், அதில் Crowd Funding என்ற முறையில் தங்களுடைய ரசிகர்களிடம் பண உதவியை கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தனர். இதை தொடர்ந்து இவர்களுக்கு இருக்கும் ரசிகர்கள் பலரும் இவர்கள் சொன்ன அந்த கணக்கில் பணத்தை போட துவங்கினார்கள்.

இந்த வீடியோவை இவர்கள் வெளியிட்டு கிட்டத்தட்ட 3 வருடங்கள் ஆகப் போகிறது. ஆனால், இதுவரை இவர்கள் என்ன படம் எடுக்கிறார்கள் என்பதை பற்றி அறிவிப்புகள் வெளியாகவில்லை. இப்படி ஒரு நிலையில் சமூக வலைதளத்தில் பல்வேறு பிரபலங்களின் ஏமாற்று வேலைகளை பற்றி தொடர்ந்து பேசி வரும் ஜேசன் சாமுயூவேல் என்பவர் இதுகுறித்து சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

இதையும் பாருங்க : அட, கபிலன் நண்பர் ஏற்கனவே இந்த விஜய் சேதுபதி படத்தில் நடித்துள்ளாரா. இதோ புகைப்படம்.

Advertisement

அந்த வீடியோவில் கோபி சுதாகர் இருவரும் தங்களின் ரசிகர்களிடம் இருந்தே பணத்தை சில app மூலம் பெற்று வருவதாக கூறி இருந்தார். மேலும், கோபி சுதாகர் படத்தை எடுக்க 8 கோடி டார்கெட் கொடுக்கப்பட்டுள்ளது, இதுவரை 6 கோடிக்கு மேல் பணம் வசூல் ஆகி இருக்கிறது. ஆனால், இன்றும் அவர்களுக்கு பணம் போட 1 நாள் பாக்கி இருப்பதாக அந்த தளத்தில் காண்பிக்கப்படுவதை அவர் ஆதாரத்துடன் வெளியிட்டார்.

மேலும், கோபி சுதாகர் இருவரும் பணத்தை முதலீடு செய்யும் app குறித்த ப்ரோமோஷன்களை தங்கள் வீடியோகளில் பேசி இருந்தனர். ஆனால், தற்போது அதையெல்லாம் டெலீட் செய்துவிட்டார்கள் என்றும் அதற்கும் ஆதாரத்தை பகிர்ந்தார். இதை தொடர்ந்து பலரும் கோபி சுதாகர் படம் எடுப்பதாக ரசிகர்களிடம் வாங்கிய பணம் என்ன ஆனது என்று கேள்வி எழுப்பினர்.

Advertisement

இதுகுறித்து விளக்கம் ஒன்றை வீடியோ மூலம் வெளியிட்டுள்ளனர் கோபி சுதாகர். அந்த வீடியோவில் படம் தொடங்கியது முதலே வேறு எந்த படத்திலும் ஒப்பந்தம் ஆகாமல் முழு மூச்சாக இந்த படத்துக்கு உழைத்துக் கொண்டிருக்கிறோம்.பணம் வாங்கிவிட்டோம் என்பதற்காக ஏனோதானோவென்று ஒரு படத்தை கொடுத்து விடக் கூடாது என்று நினைக்கிறோம். ஏன் இவ்வளவு இடைவெளி என்பது படத்தின் டீஸர் வரும்போது உங்களுக்கு புரியும் என்று கூறியுள்ளனர்.

இதையும் பாருங்க : தெலுங்கில் இதுவரை இல்லாத ரொமான்ஸ் காட்சியில் நடித்துள்ள ஆனந்தி – 5 மில்லியன் வியூஸ் கடந்து செல்லும் வீடியோ.

Advertisement

இப்படி ஒரு நிலையில் பரிதாபங்கள் சேனலில் பணியாற்றிய பாலு போஸ் என்பவர், பரிதாபங்கள் சேனலில் நான் இயக்கிய அனைத்து வீடியோக்களும் நீக்கப்பட்டுவிட்டது… வீடியோ எங்கே என கேட்டு தயவு செய்து வெறி ஏத்த வேண்டாம் என்று பதிவிட்டுள்ளார். ஏற்கவே, கோபி சுதாகர் ரசிகர்களின் பணத்தை ஏமாற்றிவிட்டதாக குற்றச்சாட்டு நிலவி வரும் நிலையில் தற்போது இவரின் இந்த பதிவு மேலும், சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது.

Advertisement