ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படம் கடந்த 22 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகி இருந்தது. ஆர்யா, துஷாரா, விஜயன், பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா நடராஜன், கலையரசன், ஜான் கொக்கன், சந்தோஷ் பிரதாப், ஜான் விஜய், ஷபீர் கல்லராக்கல், மாறன் என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்த உள்ளார். வெளிநாட்டின் முரட்டு விளையாட்டான குத்து சண்டை விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது.
இந்த படத்தில் ஆர்யாவை தவிர்த்து பல நடிகர்களின் கதாபாத்திரமும் மிக சிறப்பான பாராட்டுகளை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக டான்சிங் ரோசாக வந்த நடிகர் ஷபீர், டாடியாக வந்த ஜான் விஜய், ரங்கன் வாத்தியாராக வந்த பசுபதி ஆகியோரின் கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்து உள்ளது. இந்த படத்தில் ஒரு சில காட்சிகள் நடித்தவர்கள் கூட ரசிகர்களால் மறக்க முடியாதபடி நடித்து இருந்தனர்.
இதையும் பாருங்க : தெலுங்கில் இதுவரை இல்லாத ரொமான்ஸ் காட்சியில் நடித்துள்ள ஆனந்தி – 5 மில்லியன் வியூஸ் கடந்து செல்லும் வீடியோ.
அந்த வகையில் இந்த படத்தில் ஆர்யாவின் நண்பராக கெளதம் என்ற கதாபாத்திரத்தில் நடித்த இவரையும் பலரும் பாராட்டி வருகின்றனர். அதிலும் இவர் இந்த படத்தில் பேசிய ‘இங்க வாய்பின்றது நமக்கெல்லாம் அவ்ளோ சீக்கிரம் கெடச்சிட்ரது கிடையாது. இது நம்ம ஆட்டம், நீ ஏறி ஆடுடா இது நம்ம காலம் பாத்துக்கலாம்’ என்ற இவரது வசனம் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வரை வைரலானது. இவருடைய பெயர் சரவணவேல், இவர் 12 ஆண்டுக்கும் மேலாக சினிமாவில் நடிக்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறாராம்.
இந்த படத்தில் நடித்த இவருக்கு இது தான் முதல் படம் என்று பலர் நினைத்து இருக்கலாம். ஆனால், இவர் முதன் முறையாக நடித்த படம் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘நானும் ரவுடி தான்’ திரைப்படம் தான். இந்த படத்தில் விஜய் சேதுபதி போலீஸ் பயிற்சிக்கு செல்லும் போது விஜய் சேதுபதி, ரவுடி தான் கெத்து என்று இவரிடம் தான் சொல்வார். இந்த காட்சியின் புகைப்படத்தை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.