படம் எடுப்பதாக கூறி 25 ஆயிரம் பேரிடம் ரூ.6 கோடி வசூல் – ஏமாற்றிவிட்டனரா கோபி சுதாகர்?

0
461
- Advertisement -

படம் எடுப்பதாக கூறி ஆறு கோடி ரூபாய் வசூல் செய்து பரிதாபங்கள் கோபி, சுதாகர் ஏமாற்றியதாக எழுந்த சர்ச்சை தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே சோசியல் மீடியாவின் பயன்பாடு அதிகமாக இருக்கிறது சோசியல் மீடியா மூலம் பல பேர் மக்கள் மத்தியில் பிரபலமாகி சினிமாவிலும் சீரியல்களிலும் நடித்து வருகிறார்கள். நடிப்பதற்கு சோசியல் மீடியா ஒரு பிளாட்பார்ம் ஆக இருக்கிறது.

-விளம்பரம்-

அதுமட்டுமில்லாமல் நடிப்பதற்கு வாய்ப்புகள் மட்டுமின்றி பணம் சம்பாதிப்பதற்கும் வழிவகை செய்கிறது.
அந்த வகையில் யூடியூபில் வீடியோ போடுவதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் தான் கோபி மற்றும் சுதாகர். இவர்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. அந்த அளவுக்கு இவர்களின் சேனல் இளைஞர் ரசிகர்களை கவர்ந்தது என்று சொல்லலாம். ஆரம்பத்தில் இவர்கள் விஜய் டிவியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தார்கள்.

- Advertisement -

பின் அங்கு அவர்களுக்கு வாய்ப்புகள் குறையத் தொடங்கிய உடன் யூடியூபில் தங்களுக்கென ஒரு சேனலை உருவாக்கி இருந்தார்கள். மேலும், அதில் அவர்கள் வீடியோக்களை போட்டு வந்தார்கள். அது மக்கள் மத்தியில் பிரபலம் ஆனது. இந்தளவிற்கு மக்கள் மத்தியில் இவர்களை ரசிக்க வைத்ததற்கு காரணம், அன்றாடம் மக்கள் வாழ்க்கையில் நடக்கும் பிரபலமான மற்றும் முக்கிய நிகழ்வுகளை தங்களுடைய பாணியில் நகைச்சுவை கலந்து கொடுத்து வருகின்றனர் கோபி மற்றும் சுதாகர்.

இதன் மூலம் இவர்கள் சில படங்களிலும் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கூட பிக் பாஸ் 7 நிகழ்ச்சியை விமர்சித்து வீடியோக்களை போட்டிருந்தார்கள். குறிப்பாக கமல் ஆடை, வேட்டையாடு விளையாடு காமெடி ரியாக்சன் வைத்து எல்லாம் பங்கமாக கலாய்த்து இருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் படம் எடுப்பதாக கூறி ஆறு கோடி ரூபாயை பரிதாபங்கள் கோபி, சுதாகர் ஏமாற்றி இருப்பதாக குறித்த தகவல் தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

பரிதாபங்கள் கோபி- சுதாகர் செய்த மோசடி:

இந்நிலையில் இது தொடர்பாக சினிமா விமர்சகர் பேட்டியில் கூறியிருப்பது, சினிமாவில் நடிக்கும் திறமை, முக பாவங்கள் கொண்டவர்கள் தான் பரிதாபங்கள் கோபி- சுதாகர். இவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக ரசிகர்கள் பார்வையாளர்களிடம் படம் தயாரிக்கப் போவதாக சொல்லி 25 ஆயிரம் பேரிடம் இருந்து ஆறு கோடி ரூபாய் வரை பணம் வாங்கி இருக்கிறார்கள். இவ்வளவு பெரிய தொகையை அவர்கள் பெற்றது பெரிய விஷயம். ஆனால், சொன்னபடி அவர்கள் படம் எடுக்கவில்லை.

படம் எடுக்காத காரணம்:

அதற்கான விஷயங்களும் செய்யவில்லை. இடையில் ஏதோ பிரச்சினை ஏற்பட்டு படம் எடுப்பது தடைப்பட்டு இருக்கிறது. நிச்சயமாக மக்களை நாங்கள் ஏமாற்றவில்லை. படம் எடுக்க போகிறோம் என்று அவர்களுடைய தரப்பில் இருந்து கூறப்பட்டது. கிரியேட்டர்கள் தயாரிப்பாளராக வரும்போது அதற்கான செலவுகள் எல்லாம் கணக்குப் போட்டு பார்த்தால் படத்தை எடுக்கவே முடியாது. இவர்கள் கிரியேட்டர்களாக இருப்பதால் படத்தை தயாரிப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. உண்மையிலேயே இவர்கள் படம் எடுப்பார்களா இல்லையா என்பதை வரும் காலங்களில் தான் தெரிய வரும்

Advertisement