கிளைமாக்ஸ் காட்சிக்கு பின் மீண்டும் தியேட்டர் பார்க்கிங்கில் சந்தித்துகொள்ளும் ஹரிஷ் கல்யாண் மற்றும் எம்.எஸ்.பாஸ்கர்.

0
586
- Advertisement -

தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் ஹரிஷ் கல்யாண். இவர் 2010-ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்த ‘சிந்து சமவெளி’ என்ற திரைப்படம் மூலம் தான் ஹீரோவாக அறிமுகமாகி இருந்தார். இதனைத் தொடர்ந்து இவர் ‘அரிது அரிது, சட்டப்படி குற்றம், பொறியாளன், வில் அம்பு’ போன்ற சில தமிழ் படங்களில் நடித்து இருந்தார். இவர் நடித்த ‘பியார் பிரேமா காதல்’ மற்றும் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ ஆகிய இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டாகி இருந்தது.

-விளம்பரம்-
parking

இதனை தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியான தாராள பிரபு, ஓமணப்பெண்ணே போன்ற படங்களும் ஹிட் அடித்தது. சினிமாவில் அறிமுகமாகி 14 ஆண்டுகள் ஆனாலும் சிறந்த கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்தது நடித்து வருகிறார். அந்த சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான பார்க்கிங் திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்று இருந்தது. இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், இந்துஜா ரவிச்சந்திரன், எம் எஸ் பாஸ்கர், இளவரசு உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

- Advertisement -

படத்தின் கதை :

இந்த படம் கடந்த ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி வெளியாகி இருந்தது. இந்த படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருந்தார். இந்த படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஸ்ரீநிஸ் தயாரித்திருந்தார்கள். படத்தில் ஹரிஷ் கல்யாண் சென்னையில் உள்ள ஒரு ஐடி கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். இவர் இந்துஜா என்பவரை காதலிக்கிறார். பின் இருவருமே திருமணம் செய்து கொள்கிறார்கள். திருமணத்திற்கு பிறகு இந்துஜா கர்ப்பமாக இருக்கிறார்.

அதற்குப்பின் இந்துஜா- ஹரிஷ் இருவருமே ஒரு புது வீட்டிற்கு குடி பெயர்கிறார்கள். அந்த வீட்டினுடைய அடித்தளத்தில் அரசு ஊழியராக எம் எஸ் பாஸ்கர் தன்னுடைய மனைவி, மகள்களுடன் பத்து வருடத்திற்கு மேலாக வசித்து வருகிறார்.மேலும், ஹரிஷ் கல்யாண் தன்னுடைய மனைவி இந்துஜாவுடன் சந்தோசமாக இருக்கிறார். தன்னுடைய மனைவி கர்ப்பமாக இருப்பதால் வெளியில் அழைத்துச் செல்ல புது கார் ஒன்றை வாங்குகிறார்.

-விளம்பரம்-

அதனை தன்னுடைய வீட்டில் நிறுத்தும்போது ஹரிஷ் கல்யாணுக்கும் எம்எஸ் பாஸ்கருக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது. ஒரு சிறிய பார்க்கிங் பிரச்சினையால் பெரிய அளவில் விளைவுகளை ஏற்படுத்துகிறது. இறுதியில் என்ன நடந்தது? என்பதை இயக்குனர் சுவாரசியமாக சொல்லி இருந்தார். இப்படி ஒரு பார்க்கிங் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்கு பின் வரும் டெலீட்டட் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

டெலீட்டட் காட்சி :

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று கடந்த ஆண்டு வெளியான சிறந்த படங்களின் லிஸ்டில் இந்த படமும் சேர்ந்தது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்கு பின்னர் ஹரிஷ் கல்யாணம் எம்.எஸ்.பாஸ்கரும் தியேட்டருக்கு செல்லும் போது அங்கே கார் பார்க்கிங்கில் சந்தித்து கொண்ட காட்சி ஒன்றை படக்குழு வெளியிட்டள்ளது. இதனை கண்ட ரசிகர்கள் இப்படி ஒரு நல்ல காட்சியை ஏன் நீக்குனீர்கள் என்று கமன்ட் செய்து வருகின்றனர்.

Advertisement