நான் அரசியலுக்கு வந்தா நெறய கர்ப்பிணி பெண்களை அதை வாங்க வைப்பேன் – சிம்பு குறித்து படு மோசமாக மிமிக்ரி செய்து Sk.

0
568
- Advertisement -

சிம்புவை கிண்டல் அடித்து நடிகர் சிவகார்த்திகேயன் பேசியிருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் சர்ச்சையாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் நடிகர் மட்டுமில்லாமல் சிங்கர், மிமிக்ரி, தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். இவர் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தான் தன்னுடைய பயணத்தை தொடங்கினார்.

-விளம்பரம்-

தற்போது இவர் பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகி கோடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார். மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடைசியாக சிவகார்த்திகேயன் அவர்கள் மாவீரன் என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தை இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கி இருந்தார். மேலும், இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்து இருந்தார்.

- Advertisement -

மாவீரன் படம்:

அனைவரும் எதிர்பார்த்த மாவீரன் படம் சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று பாக்ஸ் ஆபிசில் இடம் பிடித்து இருக்கிறது. இதனை அடுத்து சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் படம் அயலான். இந்த படம் இந்த ஆண்டு இறுதிக்குள் திரைக்கு வர இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து இவர் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடிக்கிறார்.

சிவகார்த்திகேயன் நடிக்கும் படம்:

இந்த படத்தை கமலஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து சாய் பல்லவி நடிக்கிறார். இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இதனை அடுத்து சிவகார்த்திகேயன் அவர்கள் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் படம் நடிக்க இருக்கிறார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் நிகழ்ச்சியில் பேசி இருக்கும் பழைய வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சைகளை கிளப்பி இருக்கிறது.

-விளம்பரம்-

சிவகார்த்திகேயன் வீடியோ:

சிவகார்த்திகேயன் சினிமாவில் நுழைவதற்கு முன்பு பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருக்கிறார். இவர் நிகழ்ச்சிகளில் ஸ்டாண்ட் அப் காமெடி மட்டும் இல்லாமல் மிமிக்ரியும் செய்து இருக்கிறார். அந்த வகையில் இவர் பல பிரபலங்களின் குரல்களில் பேசி அசத்தியிருக்கிறார். இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் சிவகார்த்திகேயன் பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா போல் பேசி கேள்வி கேட்டிருக்கிறார்.

நெட்டிசன்கள் விமர்சனம்:

அதற்கு சிம்பு போல் சிவகார்த்திகேயன் பேசி இருப்பது, நான் மட்டும் அதிகாரியாகிவிட்டால் நிறைய கர்ப்பிணி பெண்களுக்கு அரசு உதவி தொகை வாங்க ஏற்பாடு செய்வேன் என்று சிம்புவை விமர்சித்து பேசி இருந்தார். தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் வெளியாகியிருக்கிறது. இதை பார்த்த பலருமே, இப்படி எல்லாம் ஒருவரை விமர்சித்து பேசுவதா? நீங்கள் பிரபலமாகுவதற்கு மற்றவரை தறை குறைவாக பேசுவதா? இது ரொம்ப தவறான செயல்? என்றெல்லாம் விமர்சித்து வருகிறார்கள்.

Advertisement