PS2வில் அந்த குறை இருப்பது உண்மை தான், அதை இன்னும் கொஞ்சம் நல்லா பண்ணி இருக்காமல் – ஓப்பனாக சொன்ன பார்த்திபன்

0
881
- Advertisement -

பொன்னியின் செல்வன் 2 படம் குறித்து செய்தியாளர்களை சந்தித்து பார்த்திபன் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மணிரத்னம். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் பல ஆண்டு கால கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக எடுத்து இருக்கிறார் மணிரத்தினம்.

-விளம்பரம்-

இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், கார்த்தி, ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ரகுமான், கிஷோர், ஐஸ்வர்யா லட்சுமி, ராமன், பாலாஜி சக்திவேல் என சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். மேலும், இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி இருந்தது.

- Advertisement -

பொன்னியின் செல்வன் 2:

இந்த படத்தின் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாக சில தினங்களுக்கு முன்பு தான் வெளியாகி இருக்கிறது. இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் பார்த்து பிரபலங்கள் ரசிகர்கள் எனும் என பலரும் பாராட்டி வந்தார்கள். அதோடு பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

parthiban

பார்த்திபன் அளித்த பேட்டி:

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் குறித்து பார்த்திபன் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சின்ன பழுவேட்டையர் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் பார்த்திபன். தற்போது இவர் செய்தியார்களை சந்தித்து கூறியிருப்பது, இது வெறும் பொன்னியின் செல்வன் மட்டுமில்லை. மணிரத்தினத்தின் அப்பாவின் பெயர் கோபால்ரத்தினம் ஆக இது கோபால்ரத்தினத்தின் செல்வனின் படம். இதை நாம் அப்படித்தான் பார்க்க வேண்டும். இது மணிரத்தினத்தின் புனைவு. இதை இவ்வளவு வருடங்களாக நம்மால் ஏன் எடுக்க முடியாமல் இருந்தது.

-விளம்பரம்-

நாவல் குறித்த தகவல்:

15 எபிசோடுகளாக எடுக்க வேண்டியதை இரண்டு பாகங்களாக நம்மால் எடுக்க முடியாது என்று பலருக்கும் தோன்றியது. ஆனால், அதை மணிரத்தினம் நிரூபித்து இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அதில் நிறைய குறைகள் நிறைகள் இருக்கும். நாவலை படம் பார்க்கும் பொழுது அது முழுமை பெறவில்லை என்று உலகம் முழுவதும் எத்தனையோ பேர் சொல்லி இருக்கிறார்கள். சுஜாதா, ஜெயகாந்தன் அனைவருமே இதுகுறித்து சொல்லி வருத்தப்பட்டு இருக்கிறார்கள். அதனால் இவ்வளவு பெரிய பிரம்மாண்டம் மற்றும் அதிக வசூல் செய்யும் படத்தினை மணிரத்தினம் படைத்திருக்கிறார் என்பதற்கு பாராட்டுகளை தெரிவிக்க வேண்டும்.

பொன்னியின் செல்வன் 2 படம் குறித்து சொன்னது:

நானும் பொன்னியின் செல்வன் 2 படம் பார்த்தேன். படம் பார்க்கும்போது நான் உணர்ந்தது டக் டக் என்று அந்த எபிசோடுகள் முடிவது தான். இன்னும் கொஞ்சம் நீட்டிக்கலாம் என்று தோன்றியது. 2.45 மணி நேரங்களில் அவ்வளவு பெரிய கதையை சொல்வது என்பது மிகப்பெரிய சவாலான விஷயம். படைப்பாளியாக எவ்வளவு கடினம் என்பது எனக்கு தெரியும். அதை அவர் வெற்றிகரமாக செய்திருக்கிறார். அது கண்டிப்பாக பலருக்கும் அதிருப்பதி இருப்பது தவிர்க்க முடியாத விஷயம் என்று கூறி இருக்கிறார்.

Advertisement