விஜய்யின் ரஞ்சிதமே பாடல் பலர் பயன்படுத்திய சந்தம் – விஜய் சேதுபதி முதல் சிம்பு பாடல்களை உதாரணம் சொன்ன பாடலாசிரியர் விவேக்.

0
400
vijay
- Advertisement -

விஜய்யின் ரஞ்சிதமே பாடல் குறித்து எழுந்த சர்ச்சைக்கு பாடலாசிரியர் விவேக் அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் நடிப்பில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் விஜய் அவர்கள் நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ என்ற படத்தில் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-
varisu

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. பல எதிர்பார்ப்புடன் வெளிவந்த பீஸ்ட் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. அதோடு பெரிய அளவிலும் இந்த படம் வசூல் செய்யவில்லை என்று கூறப்பட்டது. தற்போது இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். வம்சி தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனர் ஆவார். இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார்.

- Advertisement -

வாரிசு படம்:

இயக்குனர் வம்சி- தயாரிப்பாளர் தில் ராஜு ஆகிய இருவரும் இணைந்து பல படங்களில் பணியாற்றி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், வாரிசு படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு என்று பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைகிறார்.

varisu

ரஞ்சிதமே பாடல் :

தற்போது படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. மேலும், ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை இந்த படம் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே என்று துவங்கும் பாடல் வெளியாகி இருக்கிறது. இந்த பாடலை விஜய் பாடியிருக்கிறார். இந்த பாடல் வெளியானதில் இருந்தே ரசிகர்கள் அதிருப்தி அடைந்து விட்டார்கள் என்று சொல்லலாம்.

-விளம்பரம்-

பாடல் குறித்த விமர்சனம்:

மேலும், பாடல் வரிகளும் சரியில்லை, விஜயின் நடன ஸ்டெப்புகள் ஒன்றும் சரியில்லை, நன்றாக இல்லை என்றெல்லாம் கேலிக் உள்ளாகி இருக்கிறது. அதிலும், உளவாளி படத்தில் இடம்பெற்ற மொச்சைக்கொட்டை பல்லழகி என்ற பாடல் உடைய காப்பி என்றெல்லாம் நெட்டிசன்கள் விமர்சித்திருந்தார்கள். இருந்தாலும், விஜய்யின் ரஞ்சிதமே பாடல் வெளியாகி youtubeல் 40 மில்லியன் பார்வையாளர்களை கடந்திருக்கிறது. இந்த நிலையில் இந்த பாடல் காப்பி என்று எழுந்த சர்ச்சைக்கு பாடல் ஆசிரியர் விவேக் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார்.

பாடல் ஆசிரியர் விவேக் அளித்த பேட்டி:

அதில் அவர் கூறியிருப்பது, மொச்சகொட்டை பல்லழகி என்ற பாடலை பாடிய ஒரு சீன் வந்த பிறகுதான் ரஞ்சிதமே பாடல் படத்தில் வருகிறது. அந்த பாடலுக்கான கிரெடிட்டை படத்தில் கொடுத்திருக்கிறோம். நாட்டுப்புற இசையில் இருந்து வந்த பாடல் இது. அதுபோன்ற சந்தத்தில் இதற்கு முன்பு தஞ்சாவூரு மண்ணெடுத்து, தாலி ஒன்னு செய்ய சொன்னேன், மக்க கலங்குதப்பா, என்னமோ பண்ணலாம் டிஸ்கோவுக்கு போகலாம் போன்ற பல பாடல்கள் வந்திருக்கிறது என்று கூறுகிறார். இதன் மூலம் நாட்டுப்புறப்பாடலில் இருந்து தான் ரஞ்சிதமே பாடல் வெளியாகி இருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

Advertisement