இன்னும் ஐஸ்க்ரீம் ஆசைகளே தீராத ஒரு குழந்தை – விஜய் ஆண்டனி மகள் இறப்பால் உடைந்து அழுத பார்த்திபன்.

0
685
Parthiban
- Advertisement -

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் இசையமைப்பாளராக இருந்து நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. இவர் முதலில் தமிழ் சினிமாவில் சுக்ரன் படத்தின் மூலம் தான் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

-விளம்பரம்-

இதனைத் தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். இதனிடையே கடந்த 2006ஆம் ஆண்டு பாத்திமா என்பவரை திருமணம் செய்து கொண்டார். 2005 வெளியான சுக்ரன் படத்தின் மூலம் அறிமுகமான இவர் பின்னர் நான் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமானார். அந்த படத்தை தயாரித்தது அவரது மனைவி பாத்திமா தான். இந்த தம்பதிக்கு ஒரு மகளும் இருக்கின்றனர்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் விஜய் ஆண்டனியின் மகள் மீரா இன்று அதிகாலை அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மீராவின் இறப்பிற்கு பலர் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் பல பிரபலங்கள் நேரில் சென்று தங்கள் அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

அதே போல விஜய் ஆண்டனி மகளின் இறப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ள பார்த்திபன் ‘நண்பர் விஜய் ஆண்டனி அவரது மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு இந்நேரத்தில் ஆறுதல் அளிக்க எந்த வார்த்தைக்கும் ஆற்றல் இல்லை. இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகனின் தந்தையாக என்னை நான் சமாதானப்படுத்திக்க இயலாமலே இப்பதிவு. இன்னும் ஐஸ்க்ரீம் ஆசைகளே தீராத ஒரு குழந்தை தன் வாழ்க்கையை மாய்த்துக் கொள்ளத் துணிந்தால் அந்த பிஞ்சு மனம் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும்.

-விளம்பரம்-

இன்றைய சமூகச் சூழல் மன அழுத்தத்தைக் அதிகரிக்க ஏதுவாகவே உள்ளது. தற்போது நான் எழுதிக் கொண்டிருக்கும் பாடலில் மீண்டும் அவ்வரிகளை வலியத் திணித்திருக்கிறேன் ‘வாழ்ந்து என்ன செய்ய போகிறோம் செத்துத் தொலையலாமே, செத்து தான் என்ன செய்யப் போகிறோம் வாழ்ந்தேத் தொலையலாமே’ தற்கொலை தீர்வல்ல என்ற மனோதிடத்தை குழந்தை பருவத்திலேயே எப்பாடு பட்டாவது விதைக்க வேண்டும்.

விஜய் ஆண்டனி அவரது மனைவி இருவருமே அன்பும் பண்பும் நிறைந்தவர்கள். தங்களின் உலகத்தையே இழந்தவர்களின் முகத்தை பார்த்து என்ன ஆறுதல் சொல்வது முதலில் எப்படி அக்கொடுமையை பார்ப்பேன்.? பெற்றவர்களும் மற்றவர்களும் வெவ்வேறாக இருக்கலாம் ஆனால் குழந்தைகள் என்று வந்துவிட்டால் எல்லா குழந்தைகளும் என் குழந்தைகளே. எனவே… என்னாலேயே அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லையே , அவர்களால் மட்டும் எப்படி? என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement