தற்போது இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15000 தாண்டியும், பலியானவர்களின் எண்ணிக்கை 500 ஆக அதிகரித்தும் உள்ளது. சீனாவில் தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் தற்போது உலகில் உள்ள பல நாடுகளில் பரவி கொத்து கொத்தாக மக்களை கொன்று வருகிறது. இந்த வைரஸ் தாக்கிய நபரை குணப்படுத்த இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் மக்கள் அனைவரும் பீதியில் உள்ளார்கள். தற்போது இருக்கும் ஒரே மருந்து அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது மட்டும் தான். மேலும், கொரோனாவின் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்திய பிரதமர் மோடி அவர்கள் ஊரடங்கு உத்தரவை மீண்டும் மே 3 ஆம் தேதி வரை நீட்டித்து உள்ளார். ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் யாரும் வெளியில் வரக் கூடாது என்றும், பல முன்னெச்சரிக்கைகள் உடன் இருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு மேல் ஐடி கம்பெனிகளுக்காக ஊரடங்கு உத்தரவை நீக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இது குறித்து நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை தடுப்பதற்காக இந்தியா முழுவதும் மீண்டும் மே 3-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஐ.டி. நிறுவனம் உள்ளிட்ட சில துறைகளுக்கான ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 20-ந்தேதி முதல் நீக்க இருப்பதாக மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு நடிகர் பார்த்திபன் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நடிகர் பார்த்திபன் அவர்கள் கூறியது, இரண்டு நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக இருந்தது. ஆனால், அடுத்த நாளே கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்தது. ஆகவே 20-ந் தேதியில் இருந்து ஊரடங்கு உத்தரவை நீக்கினால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்கும். மேலும், அதை கட்டுப்படுத்த இன்னும் 2 மாதங்கள் தேவைப்படும்.
இதனால் ஏழை மக்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள். மக்களும் இவ்வளவு இக்கட்டான நெருக்கடியிலும் மே 3-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவை சமாளிக்க தயாராகி விட்டனர். ஆனால், தற்போது இந்த ஊரடங்கை ஐ.டி. கம்பெனிகளுக்காக நீக்குவது சரியல்ல. ஐ.டி. நிறுவனங்கள் குறைந்த அளவு ஆட்களை வைத்து வேலை செய்யவேண்டும் என்று சொல்கிறார்கள். அங்கு 50 பேர் வேலை செய்கிறார்களா? அல்லது 100 பேர் வேலை செய்கிறார்களா? என்பது யாருக்கும் தெரியாது.
அதனால் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அப்படி ஐ.டி. கம்பெனிகளுக்காக ஊரடங்கு உத்தரவை நீக்கினால் கொரோனா தொற்று அதிகமாகி நம்மால் நினைத்து பார்க்கக்கூடிய முடியாத அளவில் விளைவுகள் இருக்கும். அதோடு எல்லாம் வளமும், பெரிய மருத்துவ வசதி உள்ள அமெரிக்கா போன்ற நாடுகளே இந்த கொரோனா வைரஸை எதிர்த்து சமாளிக்க முடியவில்லை.
ஆகவே இந்த சூழ்நிலையில் ஊரடங்கு உத்தரவை நாளை 20-ந்தேதி தளர்த்துவது சரியாக இருக்காது என்பது எனது தனிப்பட்ட கருத்து. இதை அமைச்சரிடம் நான் தெரிவித்தேன். ஊரடங்கை கடுமையாக கடைப்பிடித்தால் 10 நாட்களில் இந்த நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடலாம். ஆனால், ஊரடங்கு உத்தரவை நீக்குவது மிகப்பெரிய ஆபத்து என்று சொல்லி உள்ளார் பார்த்திபன்