சமீபத்தில் தயாரிப்பாளர் வீட்டு திருமண நிகழ்வில் விஜய்-திரிஷா இருவரும் ஒன்றாக கலந்து கொண்டு இருந்தார்கள். கடந்த சில தினங்களாவே இது சோசியல் மீடியாவில் விவாத சர்ச்சையானது. சிலர் விஜய்- திரிஷா இருவரையும் இணைத்து வைத்தும், சிலர் விஜய்க்கு ஆதரவாகவும் குரல் கொடுத்திருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் ஒரு நிகழ்ச்சியில் பார்த்திபன் கலந்து கொண்டிருந்தார்.

அப்போது திரிஷா புகைப்படத்தை காண்பித்து பேச சொன்னார்கள். அதற்கு பார்த்திபன், குந்தவை வீட்டிற்குள்ளே குந்த வைத்திருப்பது நல்லது என்று கூறியிருந்தார். இப்படி இவர் சொன்னது அரங்கத்தில் உள்ள பலருமே உற்சாகமாக கைதட்டி இருந்தார்கள். அதோடு இது மீண்டும் புதிய சர்ச்சையை கிளப்பியிருந்தது. இதை அடுத்து நடிகை திரிஷா அவர்கள் இந்த விவகாரம் தொடர்பாக பதிவு ஒன்று போட்டு இருக்கிறார்.
திரிஷா பற்றிய விமர்சனம்:
அதில் திரிஷா, மைக்கில் பேசுவதால் முட்டாள்தனமான கருத்துக்கள் எல்லாம் சரியாகி விடாது. ஒரு தனி நபரின் தூண்டுதலால் என்னுடைய பெயரை சேர்த்து தேவையற்ற கருத்துக்களை பேசியுள்ளனர். இதுபோன்ற அறிவில்லாத வார்த்தைகள் பேசப்படுபவரை விட பேசுபவரின் உண்மையான சுயரூபத்தையே காட்டும். என்று கூறி இருந்தார். இதற்கு விளக்கம் அளித்து நடிகர் பார்த்திபன் ஆடியோ ஒன்று போட்டு இருக்கிறார்.
எது நடந்ததோ
— Radhakrishnan Parthiban (@rparthiepan) March 8, 2026
அது தவறாகவே
நடந்துள்ளது இதில்.
வருந்துவதைத் தவிர
வேறு வழியில்லை !https://t.co/pOTDcx1QR8
பார்த்திபன் மன்னிப்பு:
அதில் அவர், ஒரு மேடையில் எது நடந்ததோ அது தவறாக நடந்துள்ளது. அதற்காக நான் வருந்துகிறேன். ஒரு நிகழ்ச்சியில் திரிஷாவின் புகைப்படத்தை காண்பித்து ஒரு வரியில் சொல்ல சொன்னார்கள். நான் வார்த்தை ஜாலத்திற்காக பேசியது இப்போ பெரிய விவாதமாக மாறி இருக்கிறது. நான் சொன்னது தவறு தான். அந்த சூழலில் அந்த நேரத்தில் நான் யோசிக்காமல் பேசி விட்டேன். அது ரொம்பவே தவறு. நான் பேசியதற்காக மனம் வருந்தி வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். நான் எப்போதும் பெண் சுதந்திரத்திற்காக பேசி இருக்கிறேன்.
கோடிட்ட இடங்களை
— Radhakrishnan Parthiban (@rparthiepan) March 9, 2026
நீங்கள் நிரப்புவதற்குள் …..
விடியலாக முழு
வீடியோவே வரும்!https://t.co/dBBQDGoQ9V pic.twitter.com/d2Vu8meFH8
பார்த்திபன் பதிவு:
இதை நான் வெளியிட வேண்டாம் என்று சொல்லி இருந்தேன், இருந்தும் வீடியோ வெளியிட்டு விட்டார்கள் என்று கூறி இருந்தார். இந்நிலையில் பார்த்திபன் மீண்டும் போட்டிருக்கும் பதிவில், திரிசாவுக்கு என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்களும் பாராட்டுகளும் தெரிவித்துக் கொள்கிறேன். அதுமட்டுமில்லாமல் கோடிட்ட இடங்களை நீங்கள் நிரப்புவதற்குள் விடியலாகவே முழு வீடியோ வரும் என்று கூறி இருக்கிறார்.






