‘விஜய்ன்னு நினைச்சிட்டேன்’ – தன் வீடியோவிற்கு நெட்டிசன் போட்ட கமன்ட், பார்த்திபனின் பதிலடி.

0
794
- Advertisement -

பொன்னியின் செல்வன் விழாவில் எடுத்த தன்னுடைய வீடியோவை பார்த்து விஜய் என்று குறிப்பிட்ட ரசிகருக்கு தனது குசும்பான ஸ்டைலில் பதில் அளித்துள்ளார் பார்த்திபன். தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மணிரத்னம். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக எடுத்து இருந்தார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், கார்த்தி, ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ரகுமான், கிஷோர், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் என சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்கள் நடித்து இருந்தனர். மேலும், படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து இருந்தார். இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி இருந்தது.

- Advertisement -

இந்த படத்தின் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை பொன்னியின் செல்வன் ரசிகர்கள் பலரும் மிகவும் எதிர்பார்த்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் இந்த படம் இன்று பல்வேறு மொழிகளில் வெளியாகி இருக்கிறது. இந்த படம் வெளியாவதற்கு முன்பாக படக்குழு ஊர் ஊராக சென்று இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுட்டனர்.

அந்த வகையில் பார்த்திபனும் இந்த படத்தின் தீவிர ப்ரோமிஷனின் ஈடுபட்டார். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் விழாவில் பார்த்திபன் கலந்துகொண்ட போது அவருக்கே தெரியாமல் ரசிகர் ஒருவர் கேண்டிட் வீடியோ ஒன்றை எடுத்துள்ளார். அந்த வீடியோவை பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

அந்த பதிவில் பின்னாளில் என்ன நடக்கும் என்பதை கணிக்க முடியாது.நமக்குப் பின்னால் என்னென்ன நடக்கிறது என்பதை கவனிக்க’மூன்றாம் கண்’தேவைப்படுகிறது நண்பர் Third eye பிரகாஷ் அனுப்பியது. ஒரு புன்னகைக்கே வருடம் முழுக்க தவமிருக்கும் எனக்கு,வாய்விட்டு சிரிப்பதெல்லாம் வாழ்க்கையின் வரமே என்று பதிவிட்டு இருந்தார்.

பார்த்திபனின் இந்த பதிவை பார்த்த ரசிகர் ஒருவர் ‘விஜய்ன்னு நினைச்சிட்டேன்’ என்று கமண்ட் செய்து இருந்தார். இதற்கு பதில் அளித்த பார்த்திபன் ‘அது தவறில்LEO! அப்படியெல்லாம் நினைக்கப்படாது’ என்று லியோ படத்தின் பெயரோடு தன்னுடைய ஸ்டைலில் பதில் அளித்துள்ளார். இதற்கு அந்த ரசிகர் ‘திடுக்குன்னு பார்த்(தா)திபன்’ என்று பதில் அளித்துள்ளார்.

Advertisement