ஆண்ட்ரியா ஜோடினு சொன்னாங்க – ஆனா, படம் பார்த்ததுக்கு அப்புறம் ஏமாற்றமாக இருந்தது. மாஸ்டர் பட நடிகர் அதிருப்தி.

0
1629
master
- Advertisement -

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் கடந்த ஜனவரி 14 வெளியாகி இருந்தது. விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், மாஸ்டர் மஹிந்தரன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஸ்ரீநாத், கௌரி கிஷன் என்று பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த திரைப்படம் எப்போதோ வெளியாக இருந்த நிலையில் கொரோனா பிரச்சனை காரணமாக தள்ளிப்போயிக்கொண்டு இருந்த நிலையில் கடந்த ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

இந்த படத்தில் சாந்தனு, தீனா, ரம்யா, சூப்பர் சிங்கர் சௌந்தர்யா, Vj தாரா என்று எத்தனையோ பேர் நடித்தாலும் அவர்கள் கதாபாத்திரங்களுக்கு சொல்லிக்கொள்ளும்படி இடம் கிடைக்கவில்லை. அதிலும் சாந்தனு, இந்த படம் வருவதற்கு முன்னர் தன்னுடைய கதாபாத்திரம் குறித்து கொடுத்த பில்ட்டப்பை பார்த்து பலரும் ஆவலுடன் இருந்தனர். ஆனால், இவருக்கு கிடைத்தது என்னவோ பேட்ட படத்தில் பாபி சிம்ஹாவிற்கு கொடுக்கப்பட்டது போன்ற கதாபாத்திரம் தான்

இதையும் பாருங்க : ஆபீஸ் முன்னாடி வந்து பிரச்சனை பண்ணுவேன் – லீக் ஆடியோ குறித்து கேட்டதால் பேட்டியில் கடுப்பான இலக்கியா.

- Advertisement -

இவர் மட்டும் கிடையாது இந்த படத்தில் லல்லு, kpy தீனா, சூப்பர் சிங்கர் சௌந்தர்யா, கௌரி கிஷன், ஸ்ரீநாத், சஞ்ஜீவ், vj ரம்யா என்று பலர் நடித்தாலும் அவர்கள் எல்லாம் ஒரு சில பிரேம்களில் மட்டுமே வந்து இருந்தனர். அந்த வகையில் இந்த படத்தில் ஆண்ட்ரியாவின் கணவராக நடித்த பிரபல நடிகர் பிரேமிற்கு கூட இந்த படத்தில் ஒரு சில காட்சிகள் மட்டுமே வைக்கப்பட்டு இருந்தது.

நடிகர் பிரேம், ஏற்கனவே விஜய்யின் சர்க்கார் படத்திலும் நடித்து இருந்தார். அதிலும் இவர் காட்சி பெரிதாக இல்லை. இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பிரேம், மாஸ்டர் படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசுகையில் விஜய் சார் படம் என்றதும் நான் ஒடனே ஒத்துக்கிட்டேன். ஆனால், படம் பார்க்கும் போது தான் ஏமாற்றமாக இருந்தது. இந்த படத்தில் ஆண்ட்ரியா ஜோடி என்று தான் லோகேஷ் கனகராஜ் சொன்னார். ஆனால், அந்த படம் பார்க்கும் போது ஏமாற்றமாக தான் இருந்தது. இருப்பினும் வாத்தி கம்மிங் பாடலில் வந்தது சந்தோசம் அதை எத்தனை பேர் கவனித்தார்கள் என்று தெரியவில்லை.

-விளம்பரம்-
Advertisement