பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசியது குறித்து நடிகர் பார்த்திபன் போட்டிருக்கும் பதிவு தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பிரம்மாண்டமாக விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை ஏழு சீசன்கள் முடிவடைந்து தற்போது எட்டாவது சீசன் தொடங்கியுள்ளது. கடந்த ஏழு சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கியிருந்தார். ஆனால், கமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தற்காலிகமாக விளக்குவதாக சமீபத்தில் தனது instagram பக்கத்தில் அறிவித்து இருந்தார். இது பலருக்கும் அதிர்ச்சி தான்.
நான்
— Radhakrishnan Parthiban (@rparthiepan) October 7, 2024
எப்போதோ
எங்கேயோ
கூறியதை
கூர்ய கவனக்கார நண்பர்-நினைவுக்
கூறும் போது அக்கவிதையின்
கவுரவம் கூடுகிறது!!!
தனிமையின் எக்ஸ்ரேவான எனக்கதன்
சுயம் அறிந்ததால் ….
தீவு என்றால்
நாற்புறமும் நீரன்றி வேறு
துணையற்ற தனிமைக் கூடு!
அதன் சோகமறிந்ததால்
‘தனியான தீவுக்கு
துணையாகப்… pic.twitter.com/XA1PjYcBiA
இதை அடுத்து யார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்கள்? என்ற கேள்வி எழுந்தது. அதன் பின்னர் இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குகிறார் என்று சேனல் தரப்பில் இருந்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் நேற்று, பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. இந்த சீசனில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர் ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர்.
பிக் பாஸ் சீசன் 8:
அந்த வகையில் நேற்று போட்டியாளர்களின் அறிமுக விழா நடைபெற்றது. இந்த முறை போட்டியாளர்களிடம் டம்மி டிராபி ஒன்றைக் கொடுத்து இறுதியில் அதை கொண்டு வந்தால் ஒரிஜினல் டிராபிக் கிடைக்கும் என விஜய் சேதுபதி அனைவரையும் வாழ்த்தி உள்ளே அனுப்பினார். அதோடு முதல் நாளே பிக் பாஸ் வீட்டுக்கு நடுவே கோடு போடப்பட்டு, பாய்ஸ் ஒருபுறம், கேர்ள்ஸ் ஒரு புறம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. வழக்கமாக இதுவரை நடந்து முடிந்த சீசன்களில் முதல் வாரம் ஜாலியாக இருக்கும். சில சமயங்களில் முதல் வாரம் எலிமினேஷனும் இருக்காது. ஆனால் இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டிவிஸ்டுகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் எட்டாவது சீசன் ஆரம்பமாகியுள்ளது.
பார்த்திபன் குறித்து விஜய் சேதுபதி:
இந்த பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் தொடக்க விழாவில், விஜய் சேதுபதி நிறைய தத்துவங்களை பேசி மக்கள் மனதை கவர்ந்திருந்தார். அந்த வகையில் நடிகர் பார்த்திபன் எப்போதோ சொன்ன ஒரு கவிதையையும் பகிர்ந்து இருந்தார். அதில், பார்த்திபன் சார் கூட ஒரு கவிதை சொல்லி இருப்பாரு, சில நாள் எப்படி இருக்கும் என்றால் எங்கோ தூரமா இருக்குற தீவுக்கு துணைக்கு போய்விடலாம் போல இருக்கும் என்று. அந்த மாதிரி சில நாள் நம்ம எழும்போதே நம்ம ராஜா மாதிரி பீல் ஆகும் என்று பேசியிருந்தார்.
பார்த்திபனின் பதிவு:
இப்படி பார்த்திபன் குறித்து விஜய் சேதுபதி பேசியது வைரலான நிலையில், இது குறித்து நடிகர் பார்த்திபன் தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அதில்,
நான்
எப்போதோ
எங்கேயோ
கூறியதை
கூர்ய கவனக்கார நண்பர்-நினைவுக்
கூறும் போது அக்கவிதையின்
கவுரவம் கூடுகிறது!!!
தனிமையின் எக்ஸ்ரேவான எனக்கதன்
சுயம் அறிந்ததால் ….
தீவு என்றால்
நாற்புறமும் நீரன்றி வேறு
துணையற்ற தனிமைக் கூடு!
அதன் சோகமறிந்ததால்
‘தனியான தீவுக்கு
துணையாகப் போய்விடலாமா?’
என யோசிப்பதாய் எழுதியிருந்தேன். ஏதோ
இல்லாமலே இருக்கிறேன் BBயில்!!! என்று விஜய் சேதுபதிக்கு நன்றி சொல்லும் வகையில் பதிவிட்டுள்ளார்.