பொன்னியின் செல்வன் ஆடியோ லான்ச்ல சொதப்பி என்ன டென்சன் ஆகிட்டாங்க – பார்த்திபன் வெளியிட்ட வீடியோ.

0
702
parthiban
- Advertisement -

பொன்னியின் செல்வன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி குறித்து கார்த்தி பேசிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மணிரத்னம். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக எடுத்து இருந்தார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், கார்த்தி, ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ரகுமான், கிஷோர், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் என சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்கள் நடித்து இருந்தனர். மேலும், படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து இருந்தார். இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி இருந்தது.

- Advertisement -

பொன்னியின் செல்வன் படம் :

இந்த படத்தின் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை பொன்னியின் செல்வன் ரசிகர்கள் பலரும் மிகவும் எதிர்பார்த்து வருகிறார்கள். இப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகும் என்று படக்குழு ஏற்கெனவே அறிவித்து இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியிட்டு விழா சமீபத்தில் நடந்தது.

இந்த நிலையில் நடிகர் பார்த்திபன் இதற்கு முன்னர் தான் பொன்னியின் செல்வன் படத்தை பார்க்கவில்லை என்று சொன்னதற்கும், பாகம் 2 இசை வெளியிட்டு விழாவில் நடந்த சில நிகழ்வுகளை பற்றி வீடியோ ஒன்றி வெளியிட்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

அந்த வீடியோவில் பார்த்திபன் பேசுகையில் “பொன்னியின் செல்லவன் இசை வெளியிட்டு விழாவில் நான் சிறப்பாத செய்ய வேண்டும் என்று ஆசை பட்டேன். ஆனால் சில குளறுபடிகள் வந்துவிட்டது. நான் தான் அங்கு முதலில் வந்தேன். வந்த பிறகு தனா என்கிற ஒரு உறுப்பினரிடம் சொல்லி எனக்கான நேரம் வரும் போது 10 நிமிடத்திற்கு முன்னர் என்னை கூப்பிடுங்கள் என்று சொன்னேன்.

ஆனால் அவர்கள் என்னை கூப்பிடவில்லை. பின்னர் நான் வந்தவுடன் என்னை அதிகமாக கடுப்பேற்றி விட்டார்கள். நான் பெரிய பழுவேட்டரையரை அழைப்பதுதான் திட்டம். ஆனால் அதற்கு மாறாக அவர் பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென என்னை அழைத்து பேசுங்கள் என்று கூறினார்கள். அது எனக்கு கோபத்தை ஏற்படுத்தியது. நான் எப்போதுமே மேடையில் சரியாக செயல்பட வேண்டும் என்று நினைப்பவர். இதனால் நான் மேடைக்கு சென்ற போது நிறைவாக பேசமுடியவில்லை என்பது எனக்கு வருத்தம். இந்த நிகழ்வை என்னால் சில நாட்களுக்கு மறக்க முடியாது.

அதே போல என்னிடம் பொன்னியின் செல்வன் பகுதி ஒன்றில் என்னுடைய காட்சிகள் குறைவாக இருந்தது, இரண்டாம் பாகத்தில் அதிகமாக இருக்குமா என கேட்டார்கள். நான் உண்மையாக பதில் சொல்ல வேண்டும் என்று பகுதி ஒன்றை நான் முழுமையாக பார்க்கவில்லை. பொன்னியின் செல்வன் பார்ப்பதற்குத்தான் தஞ்சாவூர் சென்றேன் ஆனால் அங்கே ரசிகர்கள் அதிகமான இடையூறு செய்ததால் படத்தை என்னால் முழுவதுமாக பார்க்க முடியவில்லை.

சென்னை வந்த பிறகு ஐ மேக்சில் பார்க்கலாம் என்று தோன்றியது. ஆனால் டடிக்கெட் கிடைக்காத சூழ்நிலை இருந்தது. அதற்கு பிறகு அந்த படம் திரையரங்குகளில் இருந்து ஓடிடி தளத்திற்கு வந்து விட்டது. ஆனால் எனக்கு ஓடிடி தளத்தில் பார்க்க பிடிக்கவில்லை. இதனைத்தான் நான் நேர்மையாக கூறிவிட்டேன் அது பிரச்னையாக மாறிவிட்டது. இதனை அறிந்த தனஞ்செயன் போன் செய்து நீங்கள் எப்படி இப்படி சொல்லலாம் என்று கேட்டார். இதனை நெகடிவாக பலர் எழுதினார்கள் அது வருத்தமாக இருந்தது என்று கூறியிருந்தார் நடிகர் பார்த்திபன்.

Advertisement