பருத்திவீரன் பட நடிகர் திடீர் மரணம் – ரசிகர்கள் இரங்கல். என்ன காரணம் தெரியுமா ?

0
1952
Sevvalai
- Advertisement -

கார்த்தி அறிமுகமான பருத்திவீரன் படத்தில் பிணம் தின்னி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான செவ்வாழை ராஜு காலமாகி இருக்கும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அமீர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரன் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இந்த படத்தில் ப்ரியாமணி, பொன்வண்ணன், சரவணன், சுஜாதா, கஞ்சா கருப்பு உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். மேலும், இந்த படத்தில் நடித்து தன் குரலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் செவ்வாழை ராஜூ.

-விளம்பரம்-

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவர் பேட்டி ஒன்றை அளித்து இருந்தார். அதில் ‘நான் தொழில், அரசியல், விவசாயம், சினிமா என பல வேலைகளை செய்து இருக்கிறேன். நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். எனக்கு பெயர் ராஜு வந்ததற்கு காரணம். அப்போ ராஜு என்பவர் ஒருவர் பிரபலமாக இருந்தார். அவருடைய பெயரை தான் எனக்கு ராஜேந்திரன் என்று வைத்தார்கள். பின் நான் சிவப்பாக இருந்ததால் செவ்வாழை ராஜு என்று அழைக்க ஆரம்பித்தார்கள். அப்படித்தான் எனக்கு பெயர் வந்தது. எங்கள் குடும்பம் விவசாயம் குடும்பம். நாங்கள் ஆரம்பத்தில் விவசாயம் தான் பண்ணிட்டு இருந்தோம்.

- Advertisement -

செவ்வாழை ராஜு அளித்த பேட்டி:

ஆனால், விவசாயத்தில் பெரியதாக எந்த ஒரு லாபமும் கிடைக்கவில்லை. விவசாயத்தில் பல முறை முதலீடுகள் போட்டு நஷ்டம் ஆனதுதான் மிச்சம். விளைச்சல் இல்லாமல், தண்ணீர் இல்லாமல் பல கஷ்டங்கள் பட்டோம். அதனால் தான் விவசாயத்தை விட்டு விட்டு அரசியலுக்கு சென்றேன். நான் மிகப்பெரிய எம்ஜிஆர் ரசிகர்.அவருடைய கட்சியில் போய் சேர்ந்தேன். எம்ஜிஆர் முதலமைச்சராக இருக்கும்போது நான் தேனி மாவட்டத்தில் பிரசிடன்ட்டாக இருந்தேன்.

This image has an empty alt attribute; its file name is qwsd.jpg

அரசியலில் செவ்வாழை ராஜு :

அப்போது அவர் கட்சிக்காக பயங்கரமாக உழைத்தேன். பின் எப்படியாவது எம்ஜிஆர் கட்சியில் ஒரு பதவி வாங்கிடலாம் என்று முயற்சி செய்தேன்.ஆனால், எனக்கு கல்வித் தகுதி இல்லை என்று தரவில்லை. அதற்கு பிறகு ஜெயலலிதா ஆட்சி வந்தது. ஜெயலலிதாவுக்கு பாதுகாவலராக இருந்தேன். அப்படி எனக்கு ஒரு முறை அடி எல்லாம் பட்டு ஜெயலலிதா அம்மா தான் என்னை மருத்துவமனையில் அனுமதித்தார்கள். அந்த அளவிற்கு ஜெயலலிதா அம்மாவிற்கு என்னை தெரியும். இருந்தாலும் எனக்கு கல்வி தகுதி இல்லை என்று அவர்களும் எனக்கு எம்எல்ஏ, எம்பி என எந்த ஒரு பதவியையும் தரவில்லை.

-விளம்பரம்-

கடைசி வரைக்கும் என்னை ஒரு வேலைக்காரனாக தான் கட்சியில் வைத்திருந்தார்கள். எனக்கு இந்த தொண்டை இந்த அளவிற்கு மாறியதற்கு காரணம் கலைஞர் தான் காரணம். அவர் எம்ஜிஆரை திட்டுவார். என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. அவரை திட்டி திட்டி தான் என்னுடைய குரல் இப்படி மாறி கிழிந்துவிட்டது. இதனால் பலரும் என்னை விமர்சித்து இருந்தார்கள். ஆனால், சின்ன வயதில் என்னுடைய குரல் அவ்வளவு அழகாக இருக்கும். பின் அரசியலில் எந்த ஒரு உதவியும் கிடைக்காத விரக்தியில் தான் சினிமாவில் போகலாமென்று நினைத்தேன்.

திடீர் மரணம் :

என் குரலுக்கு என்ற அடையாளத்தை அதுவும் மணிக்குரல் என்ற பெயரை வாங்கித் தந்தது பருத்திவீரன் படம் தான். பருத்திவீரன் படம் தான் என்னை மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது. இந்த குரலை வைத்து தான் எனக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது என்று கூறினார்.இந்நிலையில் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு காரணமாக மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செவ்வாழை ராசு சிகிச்சையின் பலன் இன்றி இன்று காலமானார். அவருக்கு வயது 70. இதனை அடுத்து அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement