தனது தாத்தா நாகேஷின் ரீ -மேக் படத்தில் நடிக்கும் பேரன் – ஆனந்த் பாபவின் 3 மகன்கள் மற்றும் ஒரே மகளை பார்த்துள்ளீர்களா ?

0
109767
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நகைச்சுவை நடிகராக திகழ்ந்தவர் நாகேஷ். இவருடைய நகைச்சுவைக்கும், குணச்சித்திர நடிப்புக்கும் ஈடு இணை யாருமில்லை. இவர் 1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். இன்றும் இவருடைய நகைச்சுவை மக்கள் மத்தியில் பேசப்பட்டு தான் இருக்கிறது. மேலும், இவருடைய மகன் தான் நடிகர் ஆனந்த் பாபு. இவர் 1983-ம் ஆண்டு சினிமா உலகில் அறிமுகம் ஆனார். தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக ஆனந்த்பாபு திகழ்ந்தார். ஆனந்த்பாபு நடிகர் மட்டுமில்லாமல் நடனம் ஆடும் திறனும் கொண்டவர்.

-விளம்பரம்-
Anand Babu's Sons All Grown Up; They're Now Kollywood Actors! | Astro Ulagam

பின்பு இவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் குறையத் தொடங்கி உடன் பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். சமீபத்தில் கூட இவர் சின்னத்திரையில் ஒளிபரப்பான மௌனராகம் தொடரில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் ஆனந்த் பாபுவுக்கு மொத்தம் நான்கு பிள்ளைகள் உள்ளன. அதில் மூன்று ஆண் பிள்ளைகள், ஒரு பெண் பிள்ளை. ஒரு கட்டத்தில் மிகப்பெரிய நடிகராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆனந்த் பாபு சில நண்பர்களின் துரோகத்திற்கு ஆளானார்.

- Advertisement -

இவர் எப்படியோ மீண்டும் சினிமாவில் தன் இரண்டாம் இன்னிங்ஸ்ஸை தொடர்ந்தார். இவருக்கு ஆதரவாக இருந்தது அவரது மனைவியும் பிள்ளைகளும் தான். அவர் பிள்ளைகள் நால்வரும் இவரை அரவணைத்து பார்த்துக் கொண்டார்கள். தற்போது இவருக்கு ஐம்பத்தி ஏழு வயதாகிறது. இந்நிலையில் ஆனந்த்பாபுவின் மகன் புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. இதை பார்த்து பலரும் இது ஆனந்த் பாபுவின் மகனா! இத்தனை நாள் தெரியாமல் போச்சே என்றும், அப்படியே சின்ன வயசு ஆனந்த் பாபுவை பார்ப்பது போல் இருக்கிறது என்று கமென்ட் போட்டு வருகிறார்கள்.

This image has an empty alt attribute; its file name is anand-babu-family-cinemapettai-2.jpg

மேலும், ஆனந்த்பாபுவின் இரண்டு மகன்களின் பெயர்கள் பிஜேஷ்,கஜேஷ். இவர்கள் இருவரும் நடிகர்களாக உள்ளனர். பிஜேஷ் அவர்கள் சந்தானம் நடிப்பில் வெளிவர இருக்கும் சர்வர் சுந்தரம் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த சர்வர் சுந்தரம் படம் தன்னுடைய தாத்தா நடித்த சர்வர் சுந்தரம் படம் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் கஜேஷ் அவர்கள் கல்கண்டு என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படம் 2014 இல் வெளிவந்தது.

-விளம்பரம்-
Advertisement