பொங்கலுக்கு சரியாக வெடித்ததா பட்டாசு – விமர்சனம் இதோ.

0
15665
- Advertisement -

தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர் தனுஷ். கடந்த ஆண்டு தனுஷ் அவர்களின் நடிப்பில் வெளிவந்த அசுரன் படம் மிகப் பெரிய அளவு வெற்றியை பெற்றது. அதனை தொடர்ந்து என்னை நோக்கி பாயும் தோட்டா படத்திலும் இவர் நடித்திருந்தார். இருந்தாலும் இவருடைய அசுரன் படம் தான் மிகப் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து உள்ள படம் பட்டாஸ்.

-விளம்பரம்-

- Advertisement -
Image result for pattas cover photo

இந்த படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்து உள்ளது. கொடி படதிற்கு பிறகு இயக்குநர் துரை செந்தில்குமார் அவர்கள் இரண்டாவது முறையாக இந்த பட்டாஸ் திரைப்படத்தில் தனுஷை இரட்டை வேடத்தில் நடிக்கவைத்து உள்ளார். இந்த படத்தில் சினேகா, மெஹ்ரின் ஆகிய இருவரும் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். விவேக்- மெர்வின் இசை அமைத்து உள்ளார்கள். மேலும், இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து இருக்கிறது.

-விளம்பரம்-

கதைக்களம்:

இந்த படத்தில் தனுஷ் அவர்கள் ஒரு திருடனாகவும், வீர கலைஞராகவும் இரண்டு வேடத்தில் நடித்து உள்ளார். அப்பா தனுஷுக்கு ஜோடியாக நடிகை சினேகா நடித்து உள்ளார். புதுப்பேட்டை படத்துக்கு பின் 13 ஆண்டுகள் கழித்து தனுஷ் – சினேகா ஜோடி இந்தப் படத்தில் இணைந்துள்ளது. மகன் தனுஷ் திருடனாக, ஜாலியாக தன் நண்பர்களுடன் சுற்றித் திரிபவர். இவருடைய நண்பராக கலக்கப்போவது யாரு சதீஸ் நடிக்கிறார். தனுஷும், சதீஸும் சேர்ந்து ஜாலியாக ஊர் சுற்றிக் கொண்டும், அப்பப்ப சின்ன சின்ன திருட்டுகளை செய்து கொண்டும் தங்களுடைய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்.

Related image

சினேகா அவர்கள் அடிமுறை என்னும் தற்காப்புக் கலையை பயின்று வருகிறார். இந்த தற்காப்பு கலையை சொல்லி தருபவர் தான் தனுஷ். பின் இவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு திருமணம் செய்து கொள்கிறார்கள். பின் இவர்களுக்கு ஒரு மகன் பிறக்கிறான். இவர்களுக்கு பெரும் பிரச்சனை வருகிறது. தனுஷ் குடும்பத்தை வில்லன் கும்மல் கொலை செய்கிறது. இதனால் சினேகா அவர்கள் தன் மகனையும், கணவரையும் இழக்கிறார். பின் குடும்பத்தை அழித்த கோபத்தில் எதிரிகளை கொலை செய்து சிறை செல்கிறார்.

தண்டனை முடிந்து வெளியே வந்த சினேகாவுக்கு தன் மகன் தனுஷ் உயிரோடு இருப்பது தெரிகிறது. பின் தன் குடும்பத்தை அழித்த எதிரிகளை தன் தந்தை கற்பித்த தற்காப்பு கலை மூலம் பழி வாங்க நினைக்கிறார். அப்படி சினேகாவின் வாழ்க்கையில் என்ன நிகழ்ந்தது? சினேகாவின் கணவருக்கும் அந்த வில்லன் கும்பலுக்கும் என்ன பகை? இதற்கு நடுவில் தனுஷ் எப்படி வருகிறார்? கடைசியில் தற்காப்பு கலை மீண்டும் உயிர் பெற்றதா? என்பதே இந்த படத்தின் மீதி கதை. இந்த படத்தில் சென்னை பாஷையை அழகாக காண்பித்து உள்ளார் இயக்குனர்.

Image result for pattas

இந்த படம் முழுக்க முழுக்க தற்காப்பு கலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் ஆகும். சினேகா அவர்கள் இந்தப் படத்தில் அட்ராசிட்டி ஆக நடித்து உள்ளார். மேலும், சினேகா அவர்கள் படத்தில் தாயின் உணர்வும், கலையின் மீது உள்ள ஆர்வத்தையும் அழகான நடித்து உள்ளார். சொல்லப்போனால் சிங்கம் பெண் என்று இவரை பலர் பாராட்டினார்கள். இந்த படத்தில் முனீஸ்காந்த் அவர்கள் தன்னுடைய இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். கலக்கப்போவது யாரு சதீஷ் போடும் கவுண்டர்கள் வேற லெவல். இந்த படத்தில் வில்லன் நவீன் சந்திரா அவர்கள் தெலுங்கில் பல படங்களில் வில்லனாக நடித்திருந்தார். இந்த படத்தில் தன்னுடைய வில்லத்தனத்தை பயங்கரமாக காட்டியுள்ளார். படத்தில் விவேக் மெர்வின் இசையில் வெளியான பாடல்கள் எல்லாம் சும்மா சில் ப்ரோ என்று சொல்லும் அளவிற்கு உள்ளது.

பிளஸ்:

இந்த படத்தில் தற்காப்பு கலையை மீண்டும் உயிர் பெறச் செய்திருக்கிறார்கள்.

படத்தில் தனுஷ்,சினேகா நடிப்பு பாராட்டுக்குரிய வகையில் உள்ளது.

பெண்களுக்கு பாதுகாப்பு முக்கியம் என்ற கருத்தை இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்

Image result for pattas

மைனஸ்:

முதல் பாதி மிகவும் மெதுவாக சென்றது போல ஃபீலிங் இருக்கு.

கதாநாயகியின் ரோல் தான் கொஞ்சம் அழுத்தமாக இருந்திருக்கலாம்.

படத்தின் அலசல்:

பட்டாஸ் படம் தற்காப்பு கலையின் முக்கியத்துவத்தையும், பெண்கள் பாதுகாப்பையும் குறிக்கும் வகையில் இருந்தது. மொத்தத்தில் தனுஷின் பட்டாஸ் படம் பொங்கலுக்கு சரவெடி ரகமாகும்.

Advertisement