விஜய் 64 படப்பிடிபிற்க்கு நடுவே பிரிகிதா வெளியிட்ட புகைப்படம். குவியும் லைக்ஸ்.

0
62898
Brigida
- Advertisement -

கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான மலையாள படம் பிரேமம் ஆகும். இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் பிரேமம் படத்தில் சாய் பல்லவி நடித்த மலர் டீச்சர் கதாபாத்திரம் இன்னும் வரை ரசிகர்கள் மத்தியில் மறக்க முடியாது. அந்த அளவில் அவருடைய நடிப்பு இருந்தது. மேலும், பல பேருக்கு சாய்பல்லவி என்று சொன்னால் தெரியாது,மலர் டிச்சர் என்று சொன்னால் தான் தெரியும். அதுபோல் தற்போது பிரேமம் மலர் டீச்சரை ஓவர்டேக் செய்யும் அளவிற்கு ‘பவி டிச்சரை’ கொண்டாடி வருகிறார்கள் ரசிகர்கள். சமூக வலைத்தளங்களில் ஒன்றான யூடியூபில் ஒளிபரப்பாகும் ‘ஆஹா கல்யாணம்’ என்ற வெப் சீரிஸ் வேற லெவல்ல மாஸ் காட்டி வருகிறது. மேலும், இந்த ஆகா கல்யாணம் என்ற வெப் சீரிஸ்க்கு என எக்கச்சக்க ரசிகர்கள் உள்ளனர்.

-விளம்பரம்-

- Advertisement -

இந்த ஆகா கல்யாணம் கதை காதலில் தோல்வி அடைந்த இளைஞர்களின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட கதையாகும். அதோடு இந்த ஆஹா கல்யாணம் என்ற வெப் சீரிஸ் மூலம் பிரபலமானவர் (பவி டிச்சர்) நடிகை பிரிகிதா. இந்தப் பவி டீச்சர் தான் இன்றைய இளைஞர்களின் கனவை தொலைக்கும் அழகான ராட்சசி. அந்த அளவுக்கு தன்னுடைய நடிப்பால் இளைஞர்களை தன் பக்கம் கவர்ந்துள்ளார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் கலக்கிய பிரிகிதா தற்போது வெள்ளித்திரையிலும் பட்டையை கிளப்ப போகிறார் என்று தெரியவந்தது. மேலும்,நடிகை பிரகிதா தளபதி 64 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இதையும் பாருங்க : விஜய் சார் ஏன் இல்ல. ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு விஜயா ப்ரோடக்க்ஷன் சொன்ன பதில்.

இந்நிலையில் அட்லீ இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் வெளிவந்த பிகில் படம் திரையரங்குகளில் வெற்றி வாகை சூடி கொண்டு,வெறித்தனமாக போய்க் கொண்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 64’ படம் குறித்த தகவல்கள் இணையங்களில் வெளிவந்துள்ளது. அதோடு இந்த படத்தை மாநகரம் படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்குகிறார். இந்த படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, ஸ்ரீமன்,சாந்தணு, ஆண்டனி வர்கீஸ், சஞ்சீவ், ஸ்ரீநாத் உள்ளிட்ட பல முக்கியமான நடிகர்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

-விளம்பரம்-

மேலும், இந்த படத்தை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ தயாரிக்க உள்ளார்கள். மேலும், இந்த தளபதி 64 படத்திற்கு பெயர் இன்னும் வைக்கவில்லை. மேலும், தளபதி 64 படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு மூன்று வாரங்களாக டெல்லியில் நடைபெற்றது. தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது என்ற தகவலும் வெளிவந்துள்ளது. இதில் விஜய், மாளவிகா மோகனன் மற்றும் வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பலர் பங்குபெற்றனர்.அதோடு இந்த படம் 2020 ஆம் ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு திரைக்கு வரும் என்ற தகவலும் வெளிவந்துள்ளது.

இவர்களுடன் பிரிகிதா இணைந்துள்ளார். மேலும், இந்த படத்தில் கல்லூரியில் ஆசிரியராக பணிபுரியும் கதாபாத்திரத்தில் விஜய் நடிக்கிறார் என்ற தகவல் வந்தது. இதனைத்தொடர்ந்து படத்தில் இடம்பெறும் ஒரு சில காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன. மேலும், படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட ஒரு சில புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து உள்ளார். மேலும், இப்போது இருக்கும் ட்ரெண்டிங் நியூஸ். இந்த புகைப்படம் தான் மாஸ் காட்டி வருகிறது என்றும் சொல்லலாம். மேலும், தளபதி 64 படத்தின் படக்குழுவுடன் பவி டீச்சர் இருக்கும் புகைப்படங்களைப் பார்த்து ரசிகர்கள் லைக்ஸ்குகளை அள்ளித் தருகிறார்கள். மேலும், பிரிகிதாவுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement