விஜய் சார் ஏன் இல்ல. ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு விஜயா ப்ரோடக்க்ஷன் சொன்ன பதில்.

0
91533
sangatamilan
- Advertisement -

தமிழ் சினிமாவில் தற்போது ஒரு வருடத்திற்கு அதிக படம் கொடுக்கும் ஒரே நடிகர் என்றால் அது விஜய் சேதுபதி தான். இறுதியாக சிந்துபாத் படத்தை தொடர்ந்து சங்கத்தமிழன் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கடந்த 15 ஆம் தேதி வெளியாவதாக இருந்தது. ஆனால் பல்வேறு பிரச்சனைகளுக்கு பின்னர் இந்த படம் நேற்று தான் வெளியானது. சிம்பு நடித்த ‘வாலு’, விக்ரமின் ’ஸ்கெட்ச்’ ஆகியப் படங்களை இயக்கிய விஜய் சந்தர் இந்த படத்தினை இயக்கியுள்ளார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் விஜய் சேதுபதி, ராஷிகன்னா, நிவேதா பெத்துராஜ்,சூரி, நாசர், அசுதோஷ் ராணா, ரவி கிஷன், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய் மற்றும் ஸ்ரீமன் போன்ற மிக பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து உள்ளார்கள். . இத்திரைப்படத்தினை விஜயா புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்து உள்ளது. விஜயா புரொடக்ஷன் இதற்கு முன்னர் தயாரித்த அஜித்தின் வீரம் படதில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தான் சங்கத் தமிழன் படம் தாமதமனதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.

இதையும் பாருங்க : 7 பெட்ரூம், 18 கழிவறை. அமெரிக்காவில் பிரியங்கா சோப்ரா வாங்கிய வீட்டின் விலை எவ்வளவு தெரியுமா ?

- Advertisement -

ஆனால், அது உண்மையில்லை என்பதை மறைமுகமாகக் கூறும் வகையில் சங்கத்தமிழன் டைட்டில் கார்டு அமைந்துள்ளது. அதாவது விஜயா புரொடக்சன் எனக் காட்டப்படும் போது, டைட்டில் கார்டில் எம்.ஜி.ஆர்., ரஜினி, அஜித் படங்களில் பாடல்கள் போடப்பட்டு உள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் குஷியில் ஆழ்ந்தனர். மேலும், விஜயா ப்ரொடக்க்ஷனின் டைட்டில் கார்டின் புதிய விடியோவை இணையத்திலும் ட்ரெண்ட் செய்து வந்தனர்.

இதனால் கடுப்பான விஜய் ரசிகர்கள் நீங்கள் விஜய்யின் பைரவா படத்தை கூட தான் தயாரித்தீர்கள் ஏன் விஜய்யை போடாவில்லை, விஜய் சாரை பிடிக்கலையா என்றெல்லாம் கமன்ட் செய்து வந்தனர். அதற்கு பதில் அளித்த விஜயா நிறுவனம், இருக்கார் என்று பதிவிட்டுள்ளது.மேலும், விஜயா இம்முறை அஜித் நடித்த வீரம் படத்தில் இருந்து காட்சியும் விஜய் நடித்த பைரவா படத்தின் காட்சியும் போட பட்டுள்ளது. அதன் முதல் முழு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement