அமீரின் காதலை மறைமுகமாக உறுதி செய்த பாவனி ரெட்டியின் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தனெக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்து இருப்பவர் பாவனி ரெட்டி. இவர் சின்னத்திரையில் ஆரம்பத்தில் ‘ரெட்டை வால் குருவி’ ‘தவணை முறை வாழ்க்கை’ போன்ற சீரியல்களில் நடித்து இருக்கிறார். பின் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த சின்ன தம்பி என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து இருந்தார். இந்த சீரியல் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் பிரபலம் கிடைத்தது.
அதுமட்டும் இல்லாமல் இவர் சில படங்களிலும் நடித்து இருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு மொழியிலும் நடித்து வருகிறார். இதனிடையே பாவனி கடந்த 2016 ஆம் ஆண்டு பிரதீப் என்ற நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், ப்ரதீப் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். அதன் பின் சிறிது காலம் பாவனி மீடியாவில் இருந்து விலகி இருந்தார். தற்போது இவர் சீரியல்களில் நடித்து வருகிறார்.
இதையும் பாருங்க : விஜய் குடும்பத்திற்கு நெருக்கமான நபர், ஜீ தமிழில் வேலை, டாட்டூ கடை – நட்சத்திராவின் வருங்கால கணவர் இவர் தான். இதோ புகைப்படம்.
பாவனி பற்றிய தகவல்:
மேலும், சின்னத்திரை பிரபலத்தின் மூலம் தான் பாவனிக்கு பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்திலிருந்தே பாவனி பல பிரச்சினைகளில் சிக்கி இருந்தார். அது மட்டுமில்லாமல் 11 முறை நாமினேஷனில் பாவனி வந்தார். இருந்தும் அவரை நாமினேஷனில் காப்பாற்றி இறுதி சுற்றுக்கு அனுப்பி வைத்து இருந்தார்கள் ரசிகர்கள். அதோடு பிக் பாஸ் சீசன் 5 இறுதி போட்டியாளர்களாக பாவனி தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார். மேலும், எல்லோரும் எதிர்பார்த்த மாதிரி ராஜு பிக் பாஸ் சீசன் 5ன் டைட்டில் பட்டத்தை தட்டி சென்றார்.
பாவனி- அமீர் காதல்:
இந்த நிகழ்ச்சியில் மூன்றாம் இடத்தை பவானி பிடித்து இருந்தார். இது ஒரு பக்கம் இருக்க, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாவனியை அமீர் காதலித்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அமீர் வைல்ட் கார்டு என்ட்ரி ஆக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தவர். ஆரம்பத்தில் இவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாக பழகி வந்தாலும் திடீர் என்று ஒரு நாள் அமீர், பாவனிடம் உன்னை காதலிக்கிறேன் திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறியிருந்தார். ஆனால், பாவனி, அமீரை தம்பி என்று சொல்லியும், இல்லை என்றும் மறுத்து வந்திருந்தார்.
பிபி நிகழ்ச்சியில் பாவனி- அமீர்:
மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பாவனி- அமீர் இருவரும் சேர்ந்து பேட்டி கொடுப்பது, நிகழ்ச்சியில் கலந்து கொள்வது, வெளியே சுற்றுவது என்று திரிகின்றார்கள். இதனால் ரசிகர்கள் மத்தியில் இவர்கள் காதலிக்கிறார்களா? என்ற சந்தேகம் எழுந்தது. தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் அமீர்-பாவனி இருவரும் பங்கேற்று நடனம் ஆடி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் இவர்கள் நெருக்கத்தைப் பற்றி இருவரும் காதலிக்க தொடங்கி விட்டார்கள் என்றெல்லாம் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
பாவனி பதிவிட்ட புகைப்படம்:
இந்த நிலையில் பாவனி பதிவு ஒன்றை போட்டிருக்கிறார். அதில் அவர் ரொமான்டிக்கான கேன்டில் லைட் டின்னர் சாப்பிடும் போது எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டு “Humans glow differently when they are treated right and loved properly #feelingloved #happyme” என குறிப்பிட்டிருக்கிறார். அதோடு அவர் காதலை உணர்கிறேன் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் மற்றொரு போட்டோவில் அமீருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு மைன் எனக் குறிப்பிட்டு இருக்கிறார். இப்படி பாவனி பதிவிட்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இருவரும் காதலிக்கிறார்கள், மறைமுகமாக அமீர் காதலை பாவனி உறுதி செய்திருக்கிறார் என்றும் கூறி வருகின்றனர்.