விஜய் குடும்பத்திற்கு நெருக்கமான நபர், ஜீ தமிழில் வேலை, டாட்டூ கடை – நட்சத்திராவின் வருங்கால கணவர் இவர் தான். இதோ புகைப்படம்.

0
719
nakshatra
- Advertisement -

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சீரியல் நடிகை ஸ்ரீநிதி, நக்ஷத்திரா குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு பின்னர் அதை டெலீட் செய்து இருந்தார். அதில் பேசிய அவர் ‘அவ நிறைய தப்பு பண்ணியிருக்கா. ஆனாலும், அவ தப்பான பொண்ணு கிடையாது.வளுக்குக் கல்யாணம், குழந்தைன்னு செட்டில் ஆகணும்னுதான் ஆசையேஅவ ஒருவரை விரும்பினாள். நான்தான் அவர் ரொம்ப நல்லவரா இருக்கார்னு ஷூட்ல சொன்னேன். அவ அவரை பார்த்துட்டு, ரெண்டு பேரும் பேசி ஒரு மாசத்துலேயே கல்யாணம் வரைக்கும் முடிவு பண்ணிட்டாங்க.

-விளம்பரம்-

ரெண்டு பேருக்கும் ஒருத்தரையொருத்தர் எவ்வளவு தூரம் தெரியும்னுலாம் எனக்குத் தெரியல. அதெல்லாம் அவங்க, அவங்க விருப்பம். நவம்பர் 18 அவளுக்கு நிச்சயதார்த்தம். அவ யாரும் இல்லாத அனாதை கிடையாது. அவளுக்கு நண்பர்கள் நாங்க இருக்கோம், தவிர அம்மா, தங்கச்சின்னு எல்லாரும் இருக்காங்க. எங்க யாருக்குமே அவளுக்கு நிச்சயதார்த்தம் நடக்கப் போகுதுன்னு கூட தெரியாது. சும்மா வீட்டுக்கு கூப்பிட்டு திடீர்னு நிச்சயம் பண்ணிட்டாங்க.

- Advertisement -

நக்ஷத்திரா குறித்து ஸ்ரீநிதி :

என் அக்கா மாதிரிதான் நான் நக்‌ஷத்ராவை நினைச்சேன். ஆனா, அந்த பையனுடைய ஃபேமிலியே டிராமா பண்ணாங்க. நக்‌ஷுகிட்ட நான் பொறாமையில் பேசுறதா சொன்னாங்க.நக்‌ஷத்ரா பசிச்சா கூட வாயைத் திறந்து கேட்க மாட்டா… அவ கேரக்டர் அப்படி! அவளை அந்தப் பையனுடைய குடும்பமே லாக் பண்ணிட்டாங்க. அவளை அவங்க அம்மாகூட சேர்த்து வச்சுட்டா போதும். இன்னும் அவங்க அவளை விடலைன்னா நான் போலீஸ் கம்ப்ளைன்ட் பண்ணுவேன். நக்‌ஷூக்கு ஏதாவது ஆச்சுன்னா அவ சாவுக்கு கூட நான் போக மாட்டேன் என்று கூறி இருந்தார்.

Nakshatra Replied To Sreenidhi Video | நக்ஷத்திரா ஸ்ரீநிதி சர்ச்சை

நக்ஷத்திரா கொடுத்த விளக்கம் :

இப்படி ஒரு நிலையில் ஸ்ரீநிதியின் இந்த வீடியோவிற்கு பதில் கூறும் வகையில் நக்ஷத்திரா வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் பேசிய அவர் ‘2-3 நாளா நான் எதோ பிரச்னைல இருக்குறதாவும், நா லவ் பண்றவரோட குடும்பம் என்ன இறுக்கி பிடிச்சி வச்சிருப்பதாகவும் ஒரு விஷயம் பரவிட்டு இருக்கு. அவள ஃபாலோ பண்றவங்களுக்கு தெரியும், அவ கொஞ்ச நாளா ஏதோ டிப்ரஷன்ல பண்ணிட்டு இருக்கா. ஸோ நீங்க அதை பெருசா எடுத்துக்க மாட்டீங்கன்னு நெனச்சேன்.

இதையும் பாருங்க : பன்றியும் அரசியலையும் சொல்லும் படம்’ – ரஞ்சித் தயாரித்துள்ள ‘சேத்துமான்’ – முழு விமர்சனம்.

-விளம்பரம்-

எனக்கு எந்த பிரச்னையும் இல்ல

ஆனா எனக்கும், என் கூட இருக்கவங்களுக்கும் ஃபோன் பண்ணி, என்ன பத்தி விசாரிக்கிறீங்க. அதனால தான் இந்த வீடியோ. சத்தியமா எனக்கு எந்த பிரச்னையும் இல்ல, நல்லா இருக்கேன், சேஃபா இருக்கேன், நிம்மதியா இருக்கேன்” என்று தெரிவித்திருந்தார். ஆனால்,தனக்கு நிச்சயம் ஆனது குறித்து அவர் எதுவும் சொல்லவில்லை. இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து நக்ஷத்திரா வட்டாரத்தில் விசாரித்த போது சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

விஜய் உறவினரின் நெருங்கிய நபர் :

அவருடைய பெயர் விஷ்வா, ஆழ்வார் திருநகர் பகுதியில் டாட்டூ கடை வைத்திருக்கிறார் என்றும் ஜீ தமிழ் சேனலில் சில சீரியல்களின் தயாரிப்பு நிர்வாகப் பணிகளை மேற்கொண்டு வருகிறார் என்றும் கூறியுள்ளனர். அவரது சகோதரி கூட சீரியல் நடிகை தானாம். அதுமட்டுமல்லாமல் விஷ்வாவின் குடும்பத்துக்கு சினிமா தயாரிப்பாளரும் நடிகர் விஜயின் உறவினருமான சேவியர் பிரிட்டோ குடும்பத்துடன் நல்ல நட்பு உண்டாம்.

திருமணம் குறித்து சொன்ன நக்ஷத்ரா :

அந்தத் தொடர்பில்தான் சேவியர் பிரிட்டோ ஜீ தமிழ் சேனலில் தயாரிக்கும் சீரியல்களின் தயாரிப்பு மேற்பார்வையை விஷ்வாவும் அவரின் சகோதரியும் கவனித்து வருகிறாராம். அதே போல இருவீட்டார் சம்மதத்துடன் விஷ்வா மற்றும் நக்ஷத்திரா இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டு இருக்கின்றனர். மேலும், திருமணம் குறித்து இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் அறிவிப்பதாக நக்ஷத்திராவும் தெரிவித்து இருக்கிறாராம்.

Advertisement