மேடையில் பவன் கல்யாண் செய்த செயலால் அதிர்ச்சியான நிவேதா தாமஸ் – வைரலாகும் வீடியோ (இதுல அவர் கூட படம் வேற நடிச்சாரு)

0
502
nivetha
- Advertisement -

மேடையில் பவன் கல்யாண் செய்த செயலால் நடிகை நிவேதா தாமஸ் அதிர்ச்சி அடைந்து இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. டோலிவுட்டில் நேச்சுரல் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நானி. இவர் அட்டா சம்மா என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தான் இவர் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் தெலுங்கில் பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்திருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்று தந்திருக்கிறது. இவர் தெலுங்கு மொழியில் மட்டும் இல்லாமல் தமிழ் மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

அந்த வகையில் சமீபத்தில் நானி நடிப்பில் இயக்குனர் ராகுல் சன்கிரித்யன் இயக்கத்தில் வெளிவந்த படம் ‘ஷ்யாம் சிங்கா ராய்’. இது மறுபிறவியை மையமாக கொண்டு உருவாகி இருந்த படம். இப்படத்தில் சாய் பல்லவி, கீர்த்தி ஷெட்டி, முரளி ஷர்மா உள்ளிட்ட பலர் நடித்து இருந்தார்கள். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய பல மொழிகளில் வெளிவந்து மிகப் பெரிய அளவில் ஹிட் கொடுத்திருந்தது.

இதையும் பாருங்க : இப்படி ஒரு காரணத்தால் முடிவுக்கு வரும் பூவே உனக்காக சீரியல். நடிகர்கள் அளித்த ஷாக்கிங் காரணம் (அசீம்க்கு ராசியே இல்லப்பா)

- Advertisement -

நஸ்ரியா ரீ-என்ட்ரி:

தற்போது நானி நடிப்பில் வெளிவந்து இருக்கும் படம் ‘அன்டே சந்தரானிக்கி’ . இந்த படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்கு நஸ்ரியா ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார். தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமாக இருந்த நடிகை நஸ்ரியா. திருமணத்திற்கு பின் இவர் நடிப்பதில் இருந்து பிரேக் எடுத்து இருந்தார். தற்போது முதன்முறையாக இவர் தெலுங்கில் கதாநாயகியாக ‘அன்டே சந்தரானிக்கி’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.

அன்டே சந்தரானிக்கி படம்:

இந்த படத்தை தமிழில் அடடே சுந்தரா என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் நானி கதாநாயகனாக நடித்து இருக்கிறார். விவேக் ஆத்ரேயா இந்த படத்தை இயக்கி இருக்கிறார். மேலும், இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து இருக்கிறது. இவர்களுடன் இந்த படத்தில் ரோகிணி, நதியா, ராகுல் ராமகிருஷ்ணா உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். விவேக் சாகர் இந்தப் படத்துக்கு இசையமைத்து இருக்கிறார் மற்றும் நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.

-விளம்பரம்-

மேடையில் பவன் கல்யாண் செய்த செயல்:

மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நேரடியாக வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் ப்ரீ-ரிலீஸ் ஈவென்ட் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தெலுங்கு சூப்பர் ஸ்டார் பவன் கல்யாண் வந்திருந்தார். மேடையில் பேசிய பவன் கல்யாண் அவர்கள் நானி,நஸ்ரியா மற்றும் படம், படக்குழுவினர் பற்றி பேசியவர் நிவேதா தாமஸ் பெயரை மறந்தார். பின் பவன் கல்யாணுக்கு மேடையில் கை கொடுக்க சென்றார் நிவேதா.

அதிர்ச்சியில் நிவேதா தாமஸ்:

அப்போது தான் பவன் கல்யாணுக்கு நிவேதா ஞாபகம் வந்தது. பின்னர் அருகில் இருந்தவரை அழைத்து அவரது பெயரை கேட்டு பின்னர் உடனடியாக மன்னிப்பு கேட்டு நிவேதா பெயரை கூறி வாழ்த்தி இருந்தார். இதைப்பார்த்துக் கொண்டிருந்த நிவேதா தாமஸ் அதிர்ச்சியில் உறைந்து போனார். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகிவருகிறது. பவன் கல்யாண் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் ரீ – மேக்கான ‘வக்கீல் சாப்’ படத்தில் நிவேதா தாமஸ் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement