இப்படி ஒரு காரணத்தால் முடிவுக்கு வரும் பூவே உனக்காக சீரியல். நடிகர்கள் அளித்த ஷாக்கிங் காரணம் (அசீம்க்கு ராசியே இல்லப்பா)

0
1499
- Advertisement -

திடீரென்று பூவே உனக்காக சீரியல் முடிவடைந்து உள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக செல்லும் சீரியல்களில் ஒன்றாக பூவே உனக்காக சீரியல் திகழ்ந்து வருகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கப்பட்டது. இந்த சீரியல் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக பல எபிசோடுக்கு மேல் கடந்து இருக்கிறது. ஆரம்பத்தில் இந்த சீரியலில் இரண்டு நாயகிகள் நடித்து இருந்தார்கள். அதில் ஒரு நாயகியாக பிரபல நடிகர் லிவிங்ஸ்ட்டன் மகள் ஜோவிகா நடித்து இருந்தார். முதலில் சீரியலில் இருந்து ஜோவிகா விலகி இருந்தார்.

-விளம்பரம்-

இதுகுறித்து அவர், தனது உயர் கல்வி படிப்பை தொடருவதற்காக இந்த சீரியலில் இருந்து விலகுவதாக கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பின் இந்த சீரியலில் கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் அருண். இவரும் இந்த சீரியலில் இருந்து விலகிவிட்டதாக அவரே தனது சமூக வலைதளத்தில் தெரிவித்து இருந்தார். அவருக்கு பதிலாக விஜய் டிவியில் பல சிரியல்களில் நடித்த அஸீம் கமிட் ஆகி இருக்கிறார். அசீம் வந்த பின்னர் இந்த சீரியல் Trpயில் எகிறியது. மேலும், இந்த தொடரில் பூவரசி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த ராதிகா பிரீத்தி இந்த தொடரில் இருந்து வெளியேறி இருந்தார்.

இதையும் பாருங்க : இறுதியாக என் தாய் தந்தையரின் கனவை நிறைவேற்றி விட்டேன் – யாஷிகாவின் மகிழ்ச்சியான பதிவு.

- Advertisement -

பூவே உனக்காக சீரியல் நடிகர்கள் அளித்த பேட்டி:

இது குறித்து அவரே தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அறிவித்து இருந்தார். இவருக்கு பதிலாக சன் டிவியின் அக்னி நட்சத்திரம் சீரியலில் நடித்த வர்ஷினி நடித்து இருக்கிறார். இப்படி சீரியலில் இருந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர்கள் விலகி இருந்தாலும் இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. ஆனால், என்ன காரணமோ தெரியவில்லை தற்போது திடீரென சீரியலை முடித்து விட்டதாக சொல்கிறார்கள். இந்நிலையில் இது குறித்து சீரியலில் நடித்துக் கொண்டிருந்த சில நடிகர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறி இருந்தது, கடந்த 8ஆம் தேதி வழக்கம்போல் சூட்டிங் போயிருந்தோம்.

ஷூட்டிங்கில் நடந்தது:

அன்று சூட் செய்யப்பட்ட காட்சிகள் எல்லாமே வித்தியாசமாக இருந்தது. அதாவது வில்லன் திருந்திற மாதிரியான எபிசோட், பழைய விஷயங்கள் மறந்து போயிருந்த கதாநாயகிக்கு திடீரென்று எல்லாமே நினைவுக்கு வந்த மாதிரியான காட்சிகள் எடுக்கப்பட்டது. ஹீரோ தன்னுடைய அப்பாவை கொன்றவனை தேடி அந்த கொலைகாரனை கண்டு பிடித்த மாதிரியும் சூட் பண்ணினார்கள். ஆர்ட்டிஸ்டுகள் எல்லோருக்குமே எதுவுமே புரியவில்லை. இயக்குனரை கேட்டால் எவருக்குமே புரியவில்லை என்கிறார். கடைசியில் விசாரித்தால் அன்று தான் கடைசி நாள் சூட் என்று சொன்னார்கள்.

-விளம்பரம்-

வித்தியாசமாக நடந்த கடைசி நாள் ஷூட்:

எங்களுக்கு விஷயம் தெரிந்த நேரத்தில் சூட்டிங் பேக்கப் பண்ணிட்டு மொத்த யூனிட்டும் கிளம்பிவிட்டார்கள். கடைசி நாள் ஷூட்டிங் எல்லாம் ஃபேர்வெல்லாம் கொண்டாடி நெகிழ்ச்சியா பிரியற ஷூட்டிங் யூனிட் பத்தித்தான் கேள்விப்பட்டிருக்கோம். கடைசி நாள் ஷூட்டிங் என்றே தெரியாமல் ஆர்ட்டிஸ்டுகள் நடித்து வந்தது என்றால் அது தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் இதுதான் முதல் முறையாக இருக்கும். ஹீரோ, ஹீரோயின், வில்லி நடிகை என சீரியலில் நடித்து வரும் நடிகைகளுக்கு கடந்த சில மாதங்களாகவே சம்பள பாக்கி இருக்கிறது

சீரியலின் கடைசி எபிசோட்:

சீரியல் முடிவடையப் போகிறது என தெரிந்தால் சம்பளத்தை கேட்டு நச்சரிப்பார்கள். சீரியலை முடிக்க ஒத்துழைக்க மாட்டார்கள் என நினைத்து யாருக்கும் சொல்லாமல் கடைசி எபிசோட் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. நாங்கள் விசாரித்தவரை இந்த சம்பள பாக்கி விவகாரம் சேனலுக்கு தெரியுமா? என தெரியவில்லை. ஆனால், ஜூன் 18-ஆம் தேதி சீரியல் கடைசி எபிசோட் ஒளிபரப்பாக இருப்பதாக கூறுகிறார்கள். இந்த விவகாரம் குறித்து தொடரின் தயாரிப்பாளர்கள் இடம் கேட்க போன் பன்னால் மொபைல் சுவிட்ச் ஆப் ஆகி உள்ளது. நாங்களே குழப்பத்தில் தான் இருக்கிறோம் என்று கூறியிருந்தார்கள்.

Advertisement