காபி கூட இல்ல, பாலிவுட் பட போஸ்டரை அப்படியே Morph செய்து பர்ஸ்ட் லுக் வெளியிட்ட யோகி பாபு பட குழுவினர்.

0
1562
yogi

தமிழ் சினிமா உலகில் முன்னணி காமெடி நடிகராக தற்போது கலக்கிக் கொண்டிருப்பவர் யோகிபாபு. யோகி பாபு நகைச்சுவையில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளன. தற்போது தமிழ் சினிமாவில் மிக பிஸியான காமெடி நடிகராக யோகி பாபு திகழ்ந்து கொண்டிருக்கிறார் என்று கூட சொல்லலாம். மேலும், யோகி பாபு காமெடி நடிகராக மட்டுமில்லாமல் பல படங்களில் கதாநாயகனாகவும் நடித்துக்கொண்டிருக்கிறார்.

அந்தவகையில் யோகிபாபு ஹீரோவாக நடித்து தற்போது வெளியாக உள்ள படம் ‘பேய்மாமா’. பொதுவாகவே தமிழ் சினிமாவில் 10 படங்கள் எடுத்தால் அதில் எட்டு படங்கள் ஆவது பேய் படங்களாக இருக்கின்றன. அதோடு சமீபகாலமாகவே மக்களும் அதிகமாக பேய் படங்களை அதிகம் விரும்பி பார்க்கின்றனர். இந்த நிலையில் தற்போது யோகி பாபு நடித்து இருக்கும் பேய் மாமா படம் செப்டம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவர உள்ளது.

இதையும் பாருங்க : நீங்க நினைக்கற மாதிரி இந்த ஷோ இல்ல – சர்வைவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஸ்ருஷ்டியின் உருக்கமான பதிவு.

- Advertisement -

இது யோகிபாபு கதாநாயகனாக நடிக்கும் நகைச்சுவை மற்றும் திகில் திரைப்படமாகும். இந்த படத்தை சக்தி சிதம்பரம் இயக்கி உள்ளார். இந்த படத்தில் யோகி பாபு, எம்எஸ் பாஸ்கர், மொட்டை ராஜேந்திரன், கோவைசரளா உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்நிலையில் நடிகர் யோகி பாபு நடித்த பேய்மாமா படம் திரையரங்குகளுக்கு வெளிவருவதற்கு முன்பே சோசியல் மீடியாவில் பயங்கரமாக ட்ரோல் செய்து வருகிறார்கள்.

சமூக வலைத்தளங்களில் பேய்மாமா படம் குறித்த போஸ்டர் வெளியானதைத் தொடர்ந்து பலரும் பல விதமாக கலாய்த்து வருகின்றனர். இவர் வெளியிட்டுள்ள பேய்மாமா போஸ்டர் படம் 2020 ஆம் ஆண்டு வெளியான இந்தி பூட் படத்தின் போஸ்டரை அப்படியே காப்பியடித்து வடிவமைக்கப்பட்டுள்ளது.

-விளம்பரம்-

இந்த போஸ்டரை காப்பி அடுத்தவர்கள் கதையை மட்டும் சொந்தமாக யோசித்து இருப்பார்களா? என்று சோசியல் மீடியாவில் பங்கமாக கலாய்த்து வருகிறார்கள். அதிலும் சில பேர் ‘பேய்மாமா இல்லை, காப்பி மாமா’ என்றும் கலாய்த்து வருகிறார்கள். தற்போது சோசியல் மீடியாவில் அதிகமாக பேய்மாமா போஸ்டர் படத்தின் ட்ரோல் தான் உள்ளது.

Advertisement