விழிப்புணர்வு படமாக அமைந்துள்ள ‘பெண் விலை வெறும் 999 மட்டுமே’ எப்படி ? – முழு விமர்சனம் இதோ.

0
1776
pennin vilai
- Advertisement -

இயக்குனர் வரதராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே. இந்த படத்தில் சின்னத்திரையில் பிரபலமான நடிகர் ராஜ்கமல், ஸ்வேதா பண்டிட், மது, ஜெயச்சந்திரன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். ரெயின்போ புரொடக்சன்ஸ்’ சார்பில் வரதராஜ் இந்த படத்தை தயாரித்திருக்கிறார். இந்த படத்திற்கு விவேக் சக்கரவர்த்தி இசையமைத்துள்ளார். சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், இன்று வெளியாகியுள்ள பெண் விலை வெறும் 999 ரூபாய் படம் ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

- Advertisement -

படத்தில் பிளே பாயாக சுற்றி திரிபவர் அரவிந்த். சமூக ஊடகங்களில் நட்பாகும் பெண்களுக்கு வலை வீசி வருகிறார். பின் நட்பாகும் பெண்களின் அந்தரங்க புகைப்படங்களை எடுத்து மிரட்டி அவர்கள் மூலம் பணம் சம்பாதிக்கிறார். இதனால் பல பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மேலும், பலர் இந்த விஷயம் வெளியே தெரிந்தால் அவமானம் என்று நினைத்து யாரிடமும் சொல்லாமல் பயந்து வாழ்கிறார்கள். இந்த ஒரு சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட ஒரு பெண் தற்கொலை செய்து கொள்கிறார்.

பின் போலீசார் துப்பு துலக்க ஆரம்பிக்கிறது. அதேசமயம் அரவிந்த் நந்தினியை காதலிக்க ஆரம்பிக்கிறார். ஒரு கட்டத்தில் அரவிந்த் கெட்டவன் என்று நந்தினிக்கு தெரிய வருகிறது. இறுதியில் அரவிந்தை விட்டு நந்தினி சென்றாரா? போலீஸ் பிடியில் அரவிந்த் சிக்கினாரா? தன்னுடைய தப்பை உணர்ந்தாரா? என்பதே படத்தின் மீதி கதை. சின்னத்திரையின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் ராஜ் கமல்.

-விளம்பரம்-

இவர் தான் இந்த படத்தின் கதாநாயகனாக இருக்கிறார். நெகட்டிவ் நிறைந்த கதாபாத்திரத்தில் ராஜ் நடித்திருக்கிறார். அதோடு படத்தில் தன்னால் முடிந்த அளவிற்கு நடித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் பெண்களிடம் காதல் வசனம் பேசும் காட்சிகளிலும், அவர்களை மிரட்டுவது போன்ற காட்சிகளிலும் இரு முகங்களில் அற்புதமாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக வரும் ஸ்வேதா பண்டிட் தனக்கு கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்.

மேலும், ஆபாச படம் எடுக்கும் நாசகார கும்பல் பின்னணியில் வரும் ஆப்பிரிக்க நடிகர் நன்றாகவே நடித்திருக்கிறார். செல்போன்கள் மூலம் பெண்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள்? ஒரு சாதாரண செல்போன்கள் பெண்களுடைய வாழ்க்கை எப்படி மாறுகிறது? என்கிற விழிப்புணர்வை இயக்குனர் அழகாக சொல்லி இருக்கிறார். தொழில்நுட்பங்கள் வளர வளர அதற்கான ஆபத்தானது ரொம்ப பிரித்து என்பதை புரிய வைத்திருக்கிறார் இயக்குனர்.

அதிலும் குறிப்பாக பெண்களுக்கு எவ்வளவு ஆபத்தானது என்பதை இந்த படம் அழகாக சொல்லி இருக்கிறது. படத்தில் நகைச்சுவை காட்சிகள் எல்லாம் எதுவும் பெரிதாக இல்லை. ஒளிப்பதிவும், விவேக் சக்கரவர்த்தியின் பின்னணி இசையும் ரசிக்க வைக்கிறது. பெண்களை தவறாக பயன்படுத்திக் கொள்ளும் கும்பலின் மத்தியில் எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பதை எச்சரிக்கை கொடுக்கும் விதமாக இந்த படம் அமைந்துள்ளது. இந்த படத்தில் குறைகள் பல இருந்தாலும் பெண்களுக்கான விழிப்புணர்வு கருத்து சொல்லியிருப்பதால் இயக்குனருக்கு பாராட்டு கிடைத்துள்ளது.

நிறைகள் :

நடிகர்கள் தங்கள் கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்திருக்கிறார்கள்.

படத்திற்கு ஒளிப்பதிவும் பின்னணி இசையும் பக்க பலமாக உள்ளது.

பெண்களுக்கான ஒரு விழிப்புணர்வு படமாக அமைந்துள்ளது.

இயக்குனர் கதை அற்புதமாக உள்ளது.

குறைகள் :

சொல்லிக்கொள்ளும் அளவிற்கு நகைச்சுவை எதுவும் இல்லை.

கதைக்களம் நன்றாக இருந்தாலும் இன்னும் கொஞ்சம் கதையில் மெனக்கெட்டிருந்தால் அற்புதமாக மக்கள் மத்தியில் ரீச் கிடைத்து இருக்கும்.

படத்தில் பல லாஜிக் குறைகள் உள்ளது.

இன்னும் பிரபலமான நடிகர்களை வைத்து இருந்தால் கதை சட்டென்று ரசிகர்கள் மத்தியில் ரசிக்க வைத்திருக்கும் என்று கூறப்படுகிறது.

மொத்தத்தில் பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே- பெண்களுக்கான விழிப்புணர்வு. ஆனால், ஒரு படமாக கொஞ்சம் மொக்கை தான்.

Advertisement