தனது லேட்டஸ்ட் லுக்கை அஜித்துடன் ஒப்பிட்ட ரசிகர்கள் – விவேக் அளித்த பதில்.

0
805
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக தன்னுடைய நகைச்சுவை திறமையினால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார் நடிகர் விவேக். நகைச்சுவையின் மூலம் தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் விவேக். இவரின் காமெடியில் நகைச்சுவையும், சமூக சிந்தனையும் இருக்கும். அதனால் தான் இவரை மக்கள் ‘சின்ன கலைவாணர்’ என்று அழைத்து வருகின்றனர். இவர் மேடை நகைச்சுவை கலைஞராக தான் தனது பயணத்தை தொடங்கினார்.

-விளம்பரம்-

இவர் 1987 ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை படங்களில் பிசியாக நடித்து கொண்டு இருக்கிறார்.மேலும், விவேக் எப்பொழுதுமே ட்விட்டரில் ஆக்டிவாக இருப்பவர். நாட்டு நடப்பு, சினிமா என்று பல விஷயங்கள் பற்றி பேசி வருகிறார். வெறும் காமெடி நடிகராக மட்டுமல்லாமல் பல படங்களில் விவேக் குணச்சித்திர நடிகராகவும் நடித்துள்ளார். இறுதியாக இவர் நடிப்பில் வெளியான வெள்ளை பூக்கள் படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.

- Advertisement -

அதே போல நடிகர் விவேக் பல படங்களில் ஹீரோவாக கூட நடித்திருக்கிறார். விவேக் என்றவுடன் நம் நினைவில் முதலில் வருவது அவரது கருப்பு கண்ணாடி தான். ஆனால், சமீப காலமாக நடிகர் விவேக் என்று சொன்னதும் சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலும் நினைவிற்கு வரும். சமீப காலமாகவே நடிகர் விவேக், அஜித்தை போல சால்ட் அண்ட் பேப்பர் ஹேர் ஸ்டைலில் தான் இருந்து வருகிறார். சமீபத்தில் கூட இதே கெட்டப்பில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி இருந்தார்.

அந்த புகைப்படத்தை பார்த்து பலரும் நடிகர் விவேக்கை அஜித்துடன் உப்பிட்டு வந்தனர். இதற்கு பதில் அளித்துள்ள விவேக், அன்பு ஊடகங்களுக்கு ஒரு வேண்டுகோள்.எனது சமீபத்திய போட்டோ ஷுட் படங்கள் பார்த்து விட்டு, “ஹீரோக்களுக்கு( பெயர் குறிப்பிட்டு ) போட்டியாக விவேக்” என்று செய்தி வருகிறது.நான் யாருக்கும் போட்டி அல்ல.யாரையும் யாருடனும் ஒப்பிடல் வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement