ஜெயிலரில் ரோல்க்ஸ் ரேஞ்சில் மாஸ் செய்த ஷிவராஜ்குமாரின் இந்த கன்னட படத்தை எல்லாம் பார்த்தீங்க மெர்சலாகிடுவீங்க.

0
1674
- Advertisement -

கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிப்பில் வெளிவந்த டாப் 10 படங்களின் பட்டியல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தற்போது ரஜினியின் ஜெயிலர் படம் குறித்த செய்தி தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பீஸ்ட் என்ற படு தோல்வி படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படம் கடந்த 10 ஆம் தேதி வெளியாகி இருந்தது. இந்த படத்தில் ரம்யா கிருஷ்னன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, வசந்த் ரவி, தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெரப், ஸ்வேதா போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்த படம் திரையரங்களில் வெற்றி நடை போட்டு கொண்டிருக்கின்றது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்திற்கு யூடுயூப் விமர்சகர்களும், பிரபலங்கள், ரசிகர்கள் என எல்லோருமே பாசிட்டிவான கமெண்ட்களை கொடுத்து வருகிறார்கள். இந்த படத்தின் மூலம் நெல்சன் மீண்டும் கம்பேக் கொடுத்து இருக்கிறார். மேலும், இந்த படத்தில் கேமியோ ரோலில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடித்து இருக்கிறார். இந்த படத்தை கன்னட ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.

- Advertisement -

ஜெயிலர் படம்:

கன்னடத்தில் தற்போது ஜெயிலர் திரைப்படம் இந்த அளவிற்கு வரவேற்பை பெற காரணம் இவர் தான். அதோடு ஜெயிலர் திரைப்படத்தில் மலையாள நடிகர் மோகன் லால், இந்தி நடிகர் ஜாக்கி ஷராப் என்று இருவரும் ஒரு மாஸான கதாபாத்திரத்தில் நடித்தாலும் ஷிவராஜ்குமாரின் நடிப்பு பலரை கவர்ந்து இருக்கிறது. அதிலும் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ரஜினி மற்றும் மோகன் லாலும் மாஸ் காட்டிய நிலையில் இவர் சர்வ சாதாரனமாக ஒரு tissue paper டாப்பாவை கையில் ஒரு வந்து கிளைமாக்ஸ் காட்சியில் பட்டைய கிளப்பி இருப்பார்.

மேலும், இவரது நடிப்பை கன்னட ரசிகர்கள் பாராட்டுவது ஆச்சரியமல்ல தமிழ் ரசிகர்களும் இவரது நடிப்பை பாராட்டி தள்ளி வருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் ஜெயிலர் படத்திற்கு பிறகு சிவராஜ்குமார் குறித்த செய்திகள் தான் சோசியல் மீடியாவில் அதிகமாக உலா வருகிறது. அந்த வகையில் அவர் நடித்திருக்கும் படங்களின் டாப் 10 பட்டியல் இதோ,

-விளம்பரம்-

ஓம்:

இயக்குனர் உப்பேந்திர ராவ் இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு வெளிவந்த படம் ஓம் . இந்த படத்தில் சிவராஜ்குமார், ப்ரேமா ஆகியோர் நடித்து இருந்தார்கள். இந்த படம் பெங்களூரில் உள்ள கேங்க்ஸ்டர்களின் பின்னணியை கொண்ட கதை.

ஆனந்த்:

1986 ஆம் ஆண்டு சிவராஜ்குமார் கதாநாயகான அறிமுகமான முதல் திரைப்படம் ‘ஆனந்த்’. பிரபல இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் உருவாகி இருந்தது. இந்த படம் சிவராஜ் குமாரின் சினிமா வாழ்க்கைக்கு ஒரு திருப்பு முனையாக இருந்தது. இந்த படம் புனைபெயர்களில் கடிதம் எழுதி காதலிப்பவர்கள் குறித்த கதை.

சிக்குரிடா கனாசு:

இயக்குநர் நாகபரணா இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த படம் சிக்குரிடா கனாசு. இந்த படத்தில் சிவராஜ் குமாருக்கு ஜோடியாக ‘பஞ்சதந்திரம்’ திரைப்படத்தில் அறிமுகமான வித்யா வெங்கடேசன் நடித்திருந்தார். ஹீரோ தன்னுடைய சொந்த ஊருக்கு சென்று அங்கேயே இருக்க ஆசைப்படும் போது தனது குடும்பத்திலிருந்து வரும் எதிர்ப்புகளை எப்படி சமாளிக்கிறார் என்பது தான் படத்தின் கதை.

ஜோகி தி கிங்:

கன்னட இயக்குநர் ப்ரேம் இயக்கத்தில் 2005-ம் ஆண்டு வெளிவந்த படம் தான் ‘ஜோகி தி கிங்’. கன்னடத்தில் இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட். இதை தமிழில் பரட்டை என்கிற அழகுசுந்தரம் என்ற பெயரில் ரீமேக் செய்து இருந்தார்கள். இதில் நடிகர் தனுஷ் நடித்து இருந்தார். படத்தில் தந்தையின் மறைவுக்குப் பின் தாயை பார்த்துக்கொள்வதற்கு பொறுப்பான மகனாக நகரத்திற்கு செல்லும் ஹீரோ சில சம்பவங்களால் குற்றவாளியாக மாறுவது தான் படத்தின் கதை.

ஏ.கே 47

ஓம் பிரகாஷ் ராவ் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வந்த திரைப்படம் தான் ஏ.கே 47. கன்னட சினிமாவில் DTS ஒலி அமைப்புடன் வெளிவந்த முதல் திரைப்படம்.

இன்ஸ்பெக்டர் விக்ரம்

தினேஷ் பாபு இயக்கத்தில் 1989-ம் ஆண்டு வெளிவந்த படம் இன்ஸ்பெக்டர் விக்ரம். ஹீரோவுக்கும் ஓய்வு பெற்ற ரானுவ அதிகாரிக்கும் இடையே நடக்கும் கதை தான் இன்ஸ்பெக்டர் விக்ரம். இந்த படம் வெளிவந்த சமயத்தில் பெரிதாக வரவேற்கப்படவில்லை. நாளடைவில் இந்த படத்தின் காமெடி காட்சிகள் மக்கள் மத்தியில் அதிகளவில் பேசப்பட்டது.

கத்திப்புடி

இந்த படம் 2013 ஆம் ஆண்டு வந்தது. அமைதியான வாழ்க்கைக்கு ஏங்கும் ஹீரோவை சில அரசியல்வாதிகள் தங்களின் சுயநலத்திற்காக பயன்படுத்துவது தான் படத்தின் கதை. அதோடு கன்னட திரையுலகில் திரைப்படத்தின் பாடல்களில் நடன இயக்குனர்கள் இல்லாமல் நடிகர்களே பாடல்களுக்கு நடனத்தை அறிமுகப்படுத்தியது இந்த படம்தான்.

தகரு

2018 ஆம் ஆண்டு ‘கத்திபுடி படத்திற்கு பிறகு இயக்குநர் சூரியுடன் சிவராஜ் குமார் இணைந்த இரண்டாவது படம். இந்த படத்தை பார்த்து பலரும் பாராட்டி இருந்தார்கள். இந்த படத்தை தெலுங்கில் ரீமேக் செய்து இருந்தார்கள். போலீஸ் அதிகாரிகளுக்கும் அரசியல் பிரமுகர்களுக்கும் கேங்க்ஸ்டர்களுக்கும் இடையேயான கதை.

கில்லிங் வீரப்பன்

ராம் கோபால் வர்மா இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்றது. வீரப்பனை கைது செய்வதற்காக ஆப்ரேஷன் பற்றிய கதை.

மஃப்டி (2017)

இந்த படத்தின் ரீமேக் தான் சிம்புவின் பத்து தல. சிம்பு நடித்த ஏ.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் சிவராஜ் குமார் நடித்திருந்தார். கன்னடத்தில் இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்.

Advertisement