விஜய் தேர்தலில் நின்றால் வாக்களிப்பீர்களா?மக்களின் கருத்தை கேட்டால் ஆச்சர்யபடுவீங்க..!வீடியோ இதோ..!

0
308

சினிமா துறையில் இருந்து பல்வேறு நடிகர்கள் அரசியலில் களம் கண்டுள்ளனர். தற்போது ரஜினி மற்றும் கமல் கூட அரசியல் களம் காண தயாராகி வரும் நிலையில் நடிகர் விஜய் அரசியலில் வருவார் என்று அவரது ரசிகர்கள் ஆணித்தனமாக நம்பி வருகின்றனர்.

அதற்கு ஏதுவாக நடிகர் விஜய்யும் சமீப காலமாக நடித்து வரும் படங்களிலும் பல்வேறு அரசியல் சார்ந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான சர்கார் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் விஜய் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் மக்களின் ஆதரவு எவ்வாறு இருக்கும் விஜய்யை விட மூத்த நடிகர்களான ரஜினி,கமல் இருக்கும் போது விஜய்க்கு மக்களின் ஆதரவு கிடைக்குமா என்ற கேள்வி நிலவி வரும் நிலையில் எங்களது குழு நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் மக்களின் ஆதரவு எவ்வாறு இருக்கும் என்பதை ஜாலியான ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியது. அதில் மக்கள் மத்தியில் விஜய்க்கு ஆதரவு இருக்கிறதா இல்லையா என்பதை நீங்களே வீடியோவை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.