கிழிந்த ஆடை, கெட்டுப்போன அரிசிய சாப்டு போவோம் – பேரழகன் சினேகாவின் பரிதாப நிலை.

0
1245
sneha
- Advertisement -

சினிமாவில் என்னதான் நமக்கு பிடித்த ஹீரோ ஹீரோயின் காமெடியன் இவர்கள் நடித்ததில் நமக்கு மிகவும் பிடித்த காட்சி என்று ஒன்று இருக்கும். அந்த காட்சிகளை டிவி அல்லது இன்டர்நெட்டில் பார்த்தாலோ அதை பார்த்துவிட்டு தான் அடுத்த வேலையை பார்ப்போம். அதுபோல சினிமாவில் சில படங்களே நடித்திருப்பார்கள் ஆனால் அதிலும் குறிப்பாக ஒரு காட்சிகளில் வரும் போது அவர்களின் நடிப்பால் நம்மளை மிகவும் கவர்ந்து விடுவார்கள். அதுபோல சூர்யா நடிப்பில் வெளிவந்த பேரழகன் படத்தில் சூர்யாவுக்கு பெண் பார்க்க போகும்போது மணப்பெண்ணாக வருபவர் தான் சினேகா மற்றும் இவருடன் இணைந்து விவேக் நடிக்கும் இந்த காமெடி காட்சியை நாம் பார்த்தால் நம்மை அறியாமலே சிரிக்க ஆரம்பித்து விடுவோம். இன்று அந்த சினேகாவின் பற்றிய சுவாரஸ்யமான வாழ்க்கை சம்பவங்களை பார்க்கலாம்.

-விளம்பரம்-

சினேகாவின் இயற்பெயர் கற்பகம் இவருடன் பிறந்தவர்கள் 5 பேர் 4 அக்காக்கள் ஒரு அண்ணன் கடைசி பிள்ளை தான் நமது செல்லப்பிள்ளை சினேகா மேலும் இந்த தொகுப்பை சினேகா கூறுவது போல் எடுத்து செல்வோம். நான் பிறந்து இரண்டு வயது குழந்தையாக இருக்கும்போது என் அம்மா இறந்து விட்டார்கள் என் அண்ணனுக்கு 5 வயது இருந்தது. எனது ஒரு அக்காவுக்கு 8 வகுப்பு படித்துக் கொண்டிருந்தார் மீதம் 3 அக்காக்களுக்கு நான் பிறப்பதற்கு முன்பே கல்யாணம் செய்து கொடுத்திருந்தார்கள். அதன் பின்பு கல்யாணம் சென்ற எனது 3 அக்காள் அவர்களது வீட்டில் தான் ஒவ்வொருத்தர் வீட்டிலும் கொஞ்ச நாட்கள் இருந்து அங்கிருந்துதான் படித்து வந்தேன். இப்படியாக இது மாதிரி சூழ்நிலையில் தான் நான் வளரும் நிலை ஏற்பட்டது.

- Advertisement -

கிழிந்த ஆடையுடன் பள்ளி செல்வோம் :-

நான் பள்ளி படிக்கும் பொழுது எங்களுக்கு உடுத்தி கொள்வதற்கு ஆடைகள் இருக்காது கிழிந்த ஆடைகளை தான் பள்ளிக்கு உடுத்தி செல்வேன் சக மாணவர்கள் என் ஆடைகளை பார்த்து கேலி செய்வார்கள். ஆடை என்றால் வருடத்திற்கு தீபாவளி பொங்கல் என்று இரண்டு முறை தான் துணி எடுத்து கொடுப்பார்கள். அந்த இரண்டு துணியும் அந்த வருடம் முழுவதுமாக போட்டு போட்டு பழசாகிவிடும். பள்ளிக்கு கொண்டு செல்லும் சாப்பாடும் சரியான முறையில் இருக்காது. சக மாணவர்களுடன் சாப்பாட்டை பகிர்ந்து சாப்பிடும் பொழுது என் சாப்பாடை பார்த்து விட்டு என்ன சாப்பாடு என்று தூக்கி எல்லாம் எரிந்து விடுவார்கள் அப்பொழுது எல்லாம் மன வேதனைகளுக்கு நான் ஆளாகி வந்தேன்.

சக மாணவர்களால் பள்ளியை வெறுத்த சினேகா :-

அது மட்டும் இல்லாமல் பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் வழியிலேயே என்னுடைய சக மாணவர்கள் என்னுடைய புத்தகப் பையை பிடுங்கி தண்ணீரில் தூக்கி போட்டு விடுவார்கள். இது போன்ற நெருக்கடிக்கு நான் ஆளாக்கப்பட்டதால் எனக்கு பள்ளிக்கு செல்லும் ஆர்வம் சுத்தமாக போய்விட்டு ஆகையால் எனது அக்காக்களிடம் நான் படிக்க போகவில்லை என்று சொன்னேன். அவர்களும் சரி என்று சொல்லிவிட்டு வீட்டிலேயே இருக்க விட்டு விட்டார்கள். அப்படியே நாட்கள் சென்றது நான் வீட்டை விட்டு எந்த காரணத்துக்காகவும் வெளியே வர மாட்டேன். இப்படியாக இருந்ந நிலைமையில் திடீரென்று எனக்கு திருமணம் செய்வதாக முடிவு எடுத்தார்கள்.

-விளம்பரம்-

என் கனவர் கமலுடன் நடித்துள்ளார் :-

ஆம், நான் வெளியே உலகத்தையே பார்த்தது கிடையாது என்னை மாதிரி குறைபாடு உள்ளவர்கள் இருப்பார்கள் என்று எனக்கு தெரியவே தெரியாது. எனது கணவர் அபூர்வ சகோதரர்கள் படத்தில் குள்ளமாக வரும் கமலுடன் நண்பர்கள் போல் நடித்து இருப்பார் அவருக்கு மனம் முடிக்க பெண் தேடும் பொழுது அவரைப்போல் நானும் குள்ளமாக இருக்கிறேன் என்று எங்களது வீடு தேடி வந்து பெண் கேட்டார்கள் நல்ல சம்பந்தமாக இருக்கும் என்பதனால் எனது அக்காக்களும் சரி சொல்லிவிட்டு என்னிடம் பேசினார்கள் நல்ல சம்பந்தம் வந்து உள்ளது கல்யாணம் பண்ணிக்கொள். இது உனக்கு சரியான நேரம் தான் என்று எனது பதிலுக்காக காத்திருந்தார்கள். நானும் சரி என்று சொல்லி விட்டேன்

சினேகாவின் திரை வாழ்க்கை :-

அதன் பின் மூன்று மாதங்களுக்கு கழித்து எனது கல்யாணம் முடிவாகியது. ஒரு வருடங்கள் கடந்து எனக்கு ஒரு குழந்தையும் பிறந்தது அதன் பின் ஒரு நாள் என் கணவரிடம் நான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று வீட்டில் வைத்து சொல்லி இருந்தேன். ஆதனால் சூட்டிங் சென்ற அவர் சூட்டிங்கில் அடிபட்டு விட்டதாக என்னிடம் போன் செய்து கூறினார் நானும் பதறி அடித்துக் கொண்டு என் மாமியாருடன் சூட்டிங் நடக்கும் இடத்திற்கு சென்றோம் நடிப்பதற்கு ஆள் வேண்டுமா அதனால் என்னை பொய் சொல்லி அழைத்திருக்கிறார் நான் முதலில் கோபப்பட்டேன் அவர்தான் நீ சொன்னால் வந்திருக்க மாட்டாய் அதன் பொய் சொல்லி உன்னை வரவைத்தேன் என்று என்னிடம் கூறினார். இப்படியாக தான் முதன் முதலில் எனது திரைப்பட வாழ்க்கை துவங்கியது.

பேரழகன் பட வாய்ப்பு :-

அதன் பின் தான் ஜெயம் படத்தில் வந்த பாடல் காட்சியில் நடித்தேன் ஜெயம் படத்தின் மூலமாக பேரழகன் படம் வாய்ப்பு எனக்கு வந்தது. பேரழகன் படத்தில் சூர்யா சாருடன் நடிக்க வேண்டும் என்று சொல்லும்போது எனக்கு மிகவும் பயமாக இருந்தது. அதிலும் சூர்யா சார் முதுகில் அந்த கோன் போன்ற அமைப்பு பார்த்துவிட்டு நான் மிகவும் பயந்து விட்டேன் நடிக்க மாட்டேன் என்றெல்லாம் சொன்னேன். ஆனால் அவர்கள் என்னை விடுவதாக தெரியவில்லை அதன் பின்பு அந்த படத்தில் நடித்து முடித்து விட்டேன். நான் எங்கு சூட்டிங் சென்றாலும் யாருடனும் பேச மாட்டேன் தனியாக போய் உட்கார்ந்து விடுவேன் ஆனால் என்னுடைய பயத்தை போக்குமாறு விவேக் சார் என்னோட அமர்ந்து என்னையும் மற்றவர்களையும் கலாய்த்து ஜாலியாக பேசினார். என்று அவர்களுடைய வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான விஷயங்களை நம்முடைய பகிர்ந்து கொண்டார் சினேகா.

Advertisement