ராஜ ராஜ சோழன் இந்து இல்லாம முஸ்லிமா, கிறிஸ்துவரா ? வெற்றிமாறன் பேச்சுக்கு பேரரசு பதில் தாக்கு.

0
188
Vetrimaran
- Advertisement -

ராஜ ராஜ சோழன் குறித்து வெற்றிமாறன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார் இயக்குனர் பேரரசு. பொன்னியின் செல்வன் திரைப்படம் உருவானதில் இருந்து ராஜராஜ சோழன் பற்றிய கருத்துக்களும் அவர் எந்த மதத்தை சார்ந்தவர் போன்ற விவாதங்களும் சமூக வலைதளத்தில் அடிக்கடி நடந்து கொண்டு வருகிறது. சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனின் 60-வது பிறந்த நாளை அவருடைய கட்சியினர் கொண்டாடி இருந்தார்கள். இதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் வெற்றிமாறன் கலந்து கொண்டிருந்தார்.

-விளம்பரம்-

அப்போது பேசிய அவர் ‘சினிமா என்பது வெகுமக்களை மிக எளிய மக்களை சென்றடைய கூடிய ஒரு கலை வடிவம். சினிமாவை அரசியல் மயமாக்குவது மிகவும் முக்கியம். திராவிடம் சினிமாவை கையில் எடுக்கும் போது கலை கலைக்காக மட்டுமே இருக்க வேண்டும் என்று நிறைய பேசினார்கள். ஆனால், மக்களில் இருந்து விலகி எந்த கலையும் முழுமை அடையாது. மக்களுக்காக தான் கலை மக்களை பிரதிபலிப்பது தான் கலை. இந்த கலையை சரியாக இன்று நாம் கையாள வேண்டும்.

- Advertisement -

இதையும் பாருங்க : அஜித்தின் ‘துணிவு’ படத்தில் மூன்று பிக்பாஸ் 5 போட்டியாளர்கள் – வெளியான புகைப்படம். ரசிகர்கள் வாழ்த்து.

திருவள்ளுவர் மற்றும் ராஜ ராஜ சோழன் :

ஒருவேளை நாம் இன்று அதை தவறினால் ரொம்ப சீக்கிரமாக நிறைய அடையாளங்களை இழந்து விடுவோம். வள்ளுவருக்கு காவி உடை கொடுக்கப்படுவதாக இருக்கட்டும் ராஜராஜ சோழன் ஒரு இந்து அரசனாக்குவது இருக்கட்டும் என்று பல அடையாளங்களை நம்மிடம் இருந்து எடுத்துக் கொண்டு வருகிறார்கள். இது சினிமாவிலும் நடக்கும்.சினிமாவிடம் இப்படி தொடர்ந்து அடையாளங்களை எடுக்கிறார்கள். இந்த அடையாளங்களை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். நம்முடைய விடுதலைக்காக நாம் போராட வேண்டும் என்றால் நாம் அரசியல் தெளிவோடு இருக்க வேண்டும் என்று பேசி இருக்கிறார்.

-விளம்பரம்-

பேரரசு ஆவேசம் :

இப்படி ஒரு நிலையில் இந்த விவகாரம் குறித்து பதில் கூறி இருக்கும் இயக்குனர் பேரரசு ‘இது தேவையில்லாத விஷயம் நாட்டில் 1008 பிரச்சனைகள் இருக்கிறது. எந்த மேடையில் எடுத்தாலும் இந்து மக்களை இழிவு படுத்துவதை ஒரு வேலையாக ஆரம்பித்து இருக்கிறார்கள். வேறு வேலையே இல்லையா. இதற்கு பதில் சொன்னால் நாங்கள் மத வெறியர்கள் அப்போது நீங்கள் யார் ? உங்களுக்கு சாமி கும்பிட பிடிக்கவில்லை என்றால் நீங்கள் கும்பிடாதீர்கள். சாமி கும்பிடுவனை ஏன் டார்ச்சர் செய்கிறீர்கள். ராஜராஜ சோழனை இந்துவாக காட்டுகிறார்கள் என்று வெற்றிமாறன் சார் கூறியிருக்கிறார். அப்போது அவர் என்ன கிறிஸ்டினா முஸ்லிமா.

அப்போ இந்தியா நாடு கிடையாதா ? :

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஒவ்வொரு மாகாணமாக இருந்ததை ஒன்றாக இணைத்து தற்போது இந்தியா என்று தானே சொல்கிறார்கள். அப்போ இந்தியா நாடு கிடையாதா ? அதேபோல தமிழகத்திலும் பாண்டியநாடு, சேர நாடு, சோழ நாடு என்று தானே இருந்தது. அதை எல்லாம் ஒன்றிணைத்து தானே இப்போது தமிழ்நாடு என்று சொல்கிறோம். அப்போது தமிழ்நாடு இல்லை என்று சொல்வீர்களா. அதே போலத்தான் இந்து மதத்தில் சைவம் வைணவம் என்று பல பிரிவுகளாக சிதைந்து இருந்தது அதை பின்னர் ஒன்றிணைத்தார்கள்.

உங்களுக்கு என்ன பிரச்சனை :

திருவண்ணாமலையில் சிவனை தரிசித்து விட்டு ஸ்ரீரங்கத்தில் போய் பெருமாளை தரிசிக்கிறான். சாமி கும்பிடுவர்கள் அனைவரும் அனைத்து சாமியையும் தான் வழி விடுகிறார்கள். அவன் சொல்லட்டும் இந்த சாமி இல்லை என்று. இதில் உங்களுக்கு என்ன பிரச்சனை உங்களுக்கு சாமி பிடிக்கவில்லை, இந்து இல்லை அப்புறம் நீங்கள் ஏன் சாமி பற்றி பேசுகிறீர்கள். எவன் ஒருவன் மதத்தை புண்படுத்தி பேசுகிறானோ அவன் மனிதனே இல்லை.

சாமியார்களை விட மோசமானவர்கள் :

நீங்கள் நாத்திகன் என்றால் அதை பற்றி பேசாதீர்கள். இவர்கள் எப்போதும் இந்துக்களை மட்டும் தான் பேசுகிறார்கள். உண்மையான நாத்திகனாக இருந்தால் இயேசு இல்லை அல்லா இல்லை விஷ்ணு இல்லை சிவன் இல்லை என்று அனைத்து சாமியையும் இல்லை என்று சொல்ல வேண்டும். அவன் தான் உண்மையான நாத்திகன். போலீ சாமியார்களை விட மோசமானவர்கள் இந்த போலி நாத்திகர்கள் தான். அவர்களால் நாட்டுக்கு நாசம்.

Advertisement