விஜய்க்கு சந்தனம் எனக்கு ரத்தமா ? திருப்பதி படப்பிடிப்பில் அஜித் – இயக்குனர் பேரரசு அளித்த பேட்டி

0
536
perarasu
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனராக திகழ்பவர் பேரரசு. இவருடைய இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத்தந்தது. அதுமட்டுமில்லாமல் இவருடைய படங்கள் என்றாலே சண்டை, பாசம், நகைச்சுவை, அதிரடி வசனங்கள் என்று மசாலா திரைப்படமாக இருக்கும். அந்தவகையில் பேரரசு இயக்கிய படங்களில் ஒன்று திருப்பதி. 2006 ஆம் ஆண்டு பேரரசு இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் வெளிவந்த படம் திருப்பதி. இந்த படத்தில் சதா, கஞ்சா கருப்பு, ரியாஸ்கான் உட்பட பல நடிகர்கள் அடித்திருந்தார்கள். இந்த படம் இன்றோடு வெளியாகி பதினோரு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

-விளம்பரம்-

இந்நிலையில் திருப்பதி படம் குறித்து இயக்குனர் பேரரசு பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, அஜித்தின் திருப்பதி திரைப்படம் வெளிவந்து பதினொரு வருடங்கள் ஆகிவிட்டது. என்னால் நம்பவே முடியவில்லை. இந்த படத்துக்கு முன்னாடி விஜயை வைத்து 2 படங்கள் பண்ணி இருந்தேன். இதனாலேயே விஜய் பட இயக்குனர் என்று எனக்கு பெயர் வைத்து இருந்தார்கள். இதனால் அடுத்து எந்த ஹீரோனாலும் நமக்கு படம் பண்ணுவார்கள். ஆனால், கண்டிப்பாக அஜித் படம் கிடைக்காது என்று நினைத்து இருந்தேன். அப்போ ஏவிஎம் புரோடக்சனில் இருந்து போன் வந்தது.

இதையும் பாருங்க : உண்மையில் ஒரு மரத்துக்கு ஒரு காவலரை காவல் காக்க போட்டார்களா ? டாணக்காரன் இயக்குனர் சொன்ன பல உண்மைகள்.

- Advertisement -

திருப்பதி படம் பற்றிய பேரரசு கூறியது:

நீங்கதான் டைரக்சன் பண்ணனும் என்று சொன்னார்கள். எனக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது. அதற்கு பிறகு அஜீத்தான் ஹீரோ என்று சொன்னார்கள். எனக்கு உடனே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. பின் நான், அஜித்துக்கு இது தெரியுமான்னு கேட்டேன்? அவர் சொல்லித்தான் பேசுகிறோம் என்று சொன்னார்கள். எனக்கு சந்தோஷத்தில் என்ன பண்ணுவது என்று புரியவில்லை. அப்புறம் படத்தோட கதையை எழுதிட்டு தயாரிப்பாளரிடம் கொடுத்தேன். முதலில் படத்துக்கு வெள்ளைக்காரன் என்று பெயர் வைத்திருந்தேன். பேரரசு என்று சொன்னாலே ஊர் பெயர் தான் பேமஸ். அதனால் ஊர் பெயரில் படத்தில் டைட்டில் வைக்கலாம் என்று சொல்லிவிட்டார்.

படத்தின் டைட்டில் பற்றிய தகவல்:

அதற்கு பிறகு தான் திருப்பதி என்று பெயர் வைத்தேன். இந்த பேரை சொல்றதுக்கு அஜித் சாருக்கு போன் பண்ணேன். அஜித் சார் டைட்டில் பெயர் கேட்டு ஒரு நிமிஷம் அமைதியாக இருந்தார். என்னடா சத்தமே இல்லை என்று நான் யோசித்தேன். பின் அஜித் சார் இப்போ தான் திருப்பதி கோயிலில் தரிசனம் முடித்து கீழே வந்துட்டு இருக்கேன் என்று சொன்னார். அதனால் அஜித் சாருக்கு படம் ரொம்ப பிடித்து இருந்தது. மேலும், படத்தோட கதையைச் சொல்வதற்கு அவரோட வீட்டுக்கு போயிருந்தேன். ஆனால், அவர் கதை கேட்கவில்லை. ஜாலியாக பேசி கொண்டு இருந்தார். அப்படியே மூன்று முறை கதை சொல்ல முடியாமல் போனது. பின் கதையின் பாடல் குறித்து பாடி காட்டினேன். உடனே அஜித் சார் ஓகே என்று சொல்லி விட்டார்.

-விளம்பரம்-

விஜய் குறித்து அஜித் சொன்னது:

மேலும், விஜய் பேசுற மாதிரியே நம்ம படத்துலயும் பஞ்ச் இருக்கா என்று கேட்டார். நானும் பஞ்சு வைத்திருக்கிறேன் என்று சொன்னேன். திருப்பதி இறங்கிப் போனவன் இல்லை ஏறி போறவன் என்று பஞ்ச் எழுதினேன். அவருக்கு ரொம்ப பிடித்துப் போயிருந்தது. பின் திருப்பதி படத்தில் ஒரு காட்சியில் அஜீத் முகத்தில் ரத்தம் தடவி இருக்கும். அந்த சீன் எடுத்தபோது விஜய்க்கு சந்தானம் எனக்கு ரத்தமா? என்று கேட்டு அஜித் சிரிப்பார். இப்படி திருப்பதி படம் பண்ணும் போது பயங்கர ஜாலியாக இருந்தது. இந்த படத்தில் அஜித் சார் உடைய லுக் வித்தியாசமாக இருக்கும். ஏன்னா, அவர் பாலா சாரின் நான் கடவுள் படத்தில் நடிப்பதாக இருந்தது.

திருப்பதி படத்தின் ஹீரோயின் பற்றிய தகவல்:

அதற்காக நீளமாக முடி வளர்ந்திருந்தார். அந்த கெட்டப்பில் திருப்பதி படம் பண்ணினோம். திருப்பதி படம் ஜனவரியில் படத்தோட ஷூட்டிங் தொடங்கி ஏப்ரல் 14 படத்தையும் ரிலீஸ் பண்ணிட்டோம். ரொம்ப ஸ்பீடாக பிளான் பண்ணி சரியாக முடித்தோம். அதனால் அஜித் சார் ரொம்பவே ஹேப்பியாக ஆகிவிட்டார். படத்தில் அம்மா செண்டிமெண்ட், தங்கச்சி சென்டிமென்ட் காட்சி டப்பிங் போது அஜித் சார் ரொம்ப கண்கலங்கி தான் பேசினார். முதலில் படத்தில் ஹீரோயினியாக நடிக்க நயன்தாராவிடம் பேசினோம். அப்போ அவங்க தெலுங்கில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தால் கால்ஷீட் கிடைக்கவில்லை. எங்களுக்கும் நேரமில்லாததால் சதாவிடம் பேசி கால்சீட் வாங்கினோம். திருப்பதி படத்திற்கு பிறகு அஜித் சாரிடம் இன்னொரு படம் பண்ணுவதை பற்றி பேசினோம். ஆனால், அந்த நேரத்தில் அவர் வேறொரு படத்தில் கமிட்டானார், பண்ண முடியவில்லை என்று கூறியிருந்தார்.

Advertisement