சிம்பு, தனுஷ் உட்பட 5 நடிகைகளுக்கு ரெட் கார்டா ? – தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விளக்கம்.

0
2358
Simbu
- Advertisement -

-விளம்பரம்-

சிம்பு, தனுஷ் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பரவிய வதந்திக்கு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் முரளி ராமசாமி கொடுத்திருக்கும் பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் சங்க தலைவர் முரளி ராமசாமி, துணைத்தலைவர்கள் தமிழ்க்குமரன், அர்ச்சனா கல்பாத்தி உட்பட 400 தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டு இருந்தார்கள்.

- Advertisement -

அது மட்டும் இல்லாமல் இந்த கூட்டத்தில் தயாரிப்பாளர்களின் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டிருந்தது. அதில், தயாரிப்பாளர்களிடம் பணம் வாங்கி கொண்டு படப்பிடிப்பு, டப்பிங் வேலையில் தொடர்ந்து பிரச்சினை செய்து வரும் ஐந்து நடிகர்களை வைத்து படம் தொடங்குவதற்கு முன்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தை தொடர்பு கொண்டு ஒப்பந்தம் செய்ய பிறகு தொடங்க வேண்டும் என்றும் தீர்மானம் செய்யப்பட்டிருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் அந்த நடிகர்களுடைய பெயர்களும் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறியிருக்கிறார்கள்.

பிரச்சனை கொடுக்கும் நடிகர்கள்:

இப்படி இவர்கள் கூறிய நடிகர்கள் சிம்பு, விஷால், தனுஷ், யோகி பாபு, எஸ் ஜே சூர்யா என்று கூறப்படுகிறது. அதோடு இவர்கள் ஐந்து பேருக்குமே விரைவில் ரெக்கார்ட் போட இருப்பதாகவும் தயாரிப்பாளர் சங்கம் கூறியிருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முரளி ராமசாமி பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார். அதில் அவர், நேற்று நடந்த தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் நிறைய தீர்மானங்கள் எடுக்கப்பட்டது. அதில் 2021 -2022 ஆம் ஆண்டுக்கான சங்கத்தின் வரவு, செலவுக்கு கணக்கு பார்க்கப்பட்டது.

-விளம்பரம்-

முரளி ராமசாமி அளித்த பேட்டி:

பின் 2015 முதல் 2022 வரையில் சிறு முதலீடு திரைப்படங்களுக்கு மானிய தொகை வழங்கிடவும், 2016 முதல் 2022ல் வெளியான திரைப்படங்களின் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசு விருதுகள் வழங்கிடவும் குழு அமைத்திருந்ததற்கு நன்றி தெரிவித்திருந்தோம். அதுமட்டுமில்லாமல் தயாரிப்பாளர்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு படப்பிடிப்பு, டப்பிங்க்கு வராமல் பிரச்சனை கொடுக்கும் ஐந்து நடிகர்களை வைத்து படம் துவங்குவதற்கு முன்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தை தொடர்பு கொண்டு ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.

நடிகர்கள் குறித்து சொன்னது:

அந்த நடிகர்களின் பெயர்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தீர்மானம் அறிவித்தது உண்மைதான். ஆனால் சமூக வலைத்தளத்தில் சொல்லப்படும் நடிகர்களின் பெயர்கள் எல்லாம் அதில் இல்லை. குறிப்பாக சிம்பு,தனுஷ், விஷால் குறித்து கொஞ்ச நாட்கள் ஆகவே இணையதளத்தில் தேவையில்லாமல் செய்திகள் வெளியாகி கொண்டிருப்பதால் அவர்களையும் இந்த பிரச்சனையில் இணைத்து இருக்கிறார்கள். நடிகர்களின் பெயர்களை சொல்லி விடுவோம். ஆனால், எல்லா நடிகர்களுமே படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி பெயர்கள் சொல்லிவிட்டால் அந்த தயாரிப்பாளர்களின் படங்களுக்கு பாதிப்பு ஆகும் என்பதனால் தான் நாங்கள் சொல்லவில்லை.

தயாரிப்பாளர்களுக்கு இருக்கும் பிரச்சனை:

தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்காத நடிகர்கள் பிரச்சனை நிறைவே இருக்கிறது. இந்த விவகாரம் நடிகர்கள் சங்கத்தினருக்கும் தெரியும். எங்கள் பொதுக்குழுவில் குறிப்பிட்டது போல ஐந்து நடிகர்கள் மட்டும் இல்லை. அதற்கு மேலே நிறைய நடிகர்கள் தயாரிப்பாளர்களுக்கு பிரச்சனை கொடுத்திருக்கிறார்கள். இது குறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் நடிகர் சங்கத்தின் உடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் முழு ஒத்துழைப்பு கொடுப்போம் என்று சொல்லி இருக்கிறார். அவர் இப்போது வெளிநாட்டில் இருப்பதால் அவர் வந்த பின்பு பேசி முடிவெடுக்கலாம் என்று இருக்கிறோம்.

பேச்சுவார்த்தைக்கு பிறகு பிரச்சனைக்கு தீர்வு வராமல் இருந்தால் மட்டும்தான் அவர்களுடைய பெயர்களை அறிவிப்போம். அதோடு சம்பந்தப்பட்ட நடிகர்களும் தயாரிப்பாளர்களும் நேரடியாக பேசி ஒரு முடிவுக்கு வருவதாக இருக்கிறோம். தயாரிப்பாளர்களின் பாதுகாப்பு நலனுக்காக தான் இப்படி ஒரு தீர்மானம் நாங்கள் போட்டிருக்கிறோம். திரைப்படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் என்பவர் முதலாளிக்கு சமம். அந்த முதலாளியை அவமரியாதையாக நடத்தும் நடிகர்களுக்கு இனி தயாரிப்பாளர்கள் சங்கம் ஒத்துழைப்பு வழங்காது என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.

Advertisement